வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுத்த ஐவர் – குற்றவாளிகள் என அதிரடி தீர்ப்பு

Jail, fine for last of three brothers who illegally employed foreign workers at fairs

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை சட்டவிரோதமாக வேலைக்கு எடுத்த 5 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முறையான வேலை அனுமதிச் சீட்டுகள் இல்லாமல் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியதற்காக 52 வயது ஆடவர் ஒருவருக்கு நேற்று (ஜன.04) ஒரு மாத சிறைத்தண்டனை மற்றும் S$23,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

சாங்கி விமான நிலையத்தின் “கிராண்ட் டிரா” போட்டி

இதில் தொடர்புடைய மூன்று சகோதரர்கள் உட்பட 5 பேரும் குற்றாவளிகள் என கூறப்பட்டுள்ளது.

அவர்கள் கெயிலாங் செராய் பஜாரில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.

அதில் இருவர், கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் பஜாரில் உணவுக் கடைகளை வாடகைக்கு எடுத்துள்ளனர், அதில் ஆறு வெளிநாட்டு ஊழியர்களை அவர்கள் கடை உதவியாளர்களாக வேலைக்கு எடுத்துள்ளனர்.

ஊழியர்களின் வேலை; உணவு தயாரிப்பது, விற்பனை செய்வது மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை வாங்கி கல்லாவில் போடுவது ஆகியவை ஆகும்.

அந்த ஆறு வெளிநாட்டு ஊழியர்களும் சமூக வருகை அனுமதியின்கீழ் சிங்கப்பூர் வந்துள்ளனர்.

மேலும், அவர்களிடம் ஸ்டால் உதவியாளர்களாக பணிபுரிய ஒர்க் பாஸ் அனுமதிகள் ஏதும் இல்லை என்று MOM நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

வேலைக்கு அமர்த்திய ஊழியர்களுக்கு சரியான தங்குமிட வசதிகளை அவர்கள் ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை.

ஊழியர்களில் சிலர் கடைகளை மூடிய பின் தரையில் படுத்து உறங்கியதாக சொல்லப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் 31 மற்றும் ஏப்.4 ஆகிய தேதிகளில் மனிதவள அமைச்சகத்தின் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் இந்த உண்மை தெரியவந்தது.

அதில், செல்லுபடியாகும் வேலை அனுமதிச் சீட்டு இல்லாமல் ஒரு வெளிநாட்டு ஊழியரை சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்தியதற்காக கெர் எங் ஹாக் என்றவருக்கு கடந்த ஆண்டு செப் 7, அன்று S$6,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மற்ற குற்றவாளிகளும் இதே போல தண்டிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் வேலை செய்யும், வருகை தரும் வெளிநாட்டினர் இதை செய்ய வேண்டாம் – ஜன.4 அன்று வெளியான எச்சரிக்கை