சாங்கி விமான நிலையத்தின் “கிராண்ட் டிரா” போட்டி

changi airport flights offers grand draw
Pic: Changi Airport/FB

சிங்கப்பூர் சாங்கி விமானம் நிலையம், பயணிகளுக்காக பிரம்மாண்ட டிரா குலுக்கல் ஒன்றை அறிமுகப்படுத்துகிறது.

“Shall We Just Go?” என்று சொல்லப்படும் போட்டி ஒன்றை சாங்கி ஏர்போர்ட் குழுமம் (CAG) முன்னர் அறிமுகம் செய்தது.

சிங்கப்பூரில் வேலை செய்யும், வருகை தரும் வெளிநாட்டினர் இதை செய்ய வேண்டாம் – ஜன.4 அன்று வெளியான எச்சரிக்கை

12 வாரம் நடக்கும் இந்த போட்டி ஏற்பாட்டில் மொத்தம் 40,000 பேர் கலந்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

இதில் இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள்; செபு, ஹோ சி மின் நகரம், ஜெஜு, பினாங்கு, புனோம் பென் மற்றும் சுரபயா ஆகிய இடங்களில் ஒன்றுக்கு சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட 12 வெற்றியாளர்களில் ஒவ்வொருவருக்கும் இருவழி விமான டிக்கெட்டுகள் மற்றும் Trip.com வழங்கிய S$500 மதிப்புள்ள தங்குமிடத்திற்கான வவுச்சர்களும் கொடுக்கப்பட்டன. அதற்கான டோக்கன் கட்டணமாக வெறும் S$1 மட்டுமே வெற்றியாளர்கள் செலுத்தினர்.

தேர்வான நாளில் இருந்து அடுத்த 30 நாட்களுக்குள் அவர்கள் பயணிக்க வேண்டியிருந்தது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிராண்ட் டிராவாக விரிவு

இந்த ஏற்பாட்டுக்கு கிடைத்த நல்ல வரவேற்பு காரணமாக உற்சாகமடைந்த சாங்கி ஏர்போர்ட் குழுமம், இந்த போட்டியை கிராண்ட் டிரா-வாக (Grand Draw) விரிவுபடுத்துகிறது.

பயணிகள், ஆறு இடங்களில் ஏதேனும் ஒரு இடத்துக்கு செல்ல மற்றொரு வாய்ப்பை அது வழங்குகிறது.

இதில் இரண்டு அதிர்ஷ்ட வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், அதில் சிங்கப்பூர் டிரஸ்ட் வங்கி வாடிக்கையாளர் ஒருவர் தேர்வு செய்யப்படுவார்.

அதே போல இருவழி விமான டிக்கெட்டுகள் எகானாமி வகுப்புகளில் பதிவு செய்து கொடுக்கப்படும். மேலும் Trip.com வழங்கும் S$500 மதிப்புள்ள தங்குமிடத்திற்கான வவுச்சர்களும் கொடுக்கப்படும்.

இந்த போட்டியில் முன்னதாக சேர்ந்த அனைத்து பங்கேற்பாளர்களும் தானாகவே இந்த கிராண்ட் டிரா போட்டிக்கு மாற்றப்படுவார்கள்.

இந்த கிராண்ட் டிராவில் அனைத்து சிங்கப்பூர் குடியிருப்பாளர்களுக்கும் பங்குகொள்ள முடியும்.

பதிவு செய்ய: https://www.changiairport.com/en/discover/shall-we-just-go.html

சாங்கி விமான நிலையத்தில் நடப்புக்கு வந்த புதிய சோதனை.. பிடிபட்ட பயணிகள் பலருக்கு அபராதம்