சாங்கி விமான நிலையத்தில் நடப்புக்கு வந்த புதிய சோதனை.. பிடிபட்ட பயணிகள் பலருக்கு அபராதம்

சாங்கி விமான நிலையத்தில் நடப்புக்கு வந்த புதிய சோதனை.. பிடிபட்ட பயணிகள் பலருக்கு அபராதம்

சிங்கப்பூரின் விமான நிலையம் உட்பட பல இடங்களில் அதிரடி சோதனைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர்.

அதன் ஒருபகுதியாக, கடந்த டிசம்பர் பிற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் சாங்கி விமான நிலையத்தில் மின்-சிகரெட்டுகளை வைத்திருந்த மொத்தம் 177 பேர் பிடிபட்டனர்.

சிங்கப்பூரில் வேலை.. நல்ல சம்பளம்.. எந்த நாட்டினரும் விண்ணப்பிக்கலாம்

அதில் 61 நபர்களுக்கு பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

அது குறித்து அதிகாரிகளிடம் அறிவிப்பு செய்து, அதனை அப்புறப்படுத்திய காரணத்தால் மீதமுள்ள 116 பயணிகளுக்கு அபராதங்கள் விதிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் ​​மின் சிகரெட்டுகள் பயன்படுத்துவது சட்டவிரோதமானது.

சாங்கி விமான நிலையத்திலிருந்து தொடங்கி அனைத்து வித சோதனைச் சாவடிகளிலும், உள்வரும் பயணிகள் மின்-சிகரெட் அல்லது அவற்றின் பாகங்கள் ஏதேனும் வைத்துள்ளனரா என சோதிக்கப்படுவர் என முன்னர் சொல்லப்பட்டது.

அதோடு மட்டுமல்லாமல், பயணிகளிடம் மின்-சிகரெட் அல்லது அவற்றின் பாகங்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்ற எச்சரிக்கையும் வெளியானது.

அதாவது, புகையிலை (விளம்பரங்கள் மற்றும் விற்பனை கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ், மின் சிகரெட்டுகளை வைத்திருப்பது, பயன்படுத்துவது அல்லது வாங்குவது குற்றம், இதற்கு அதிகபட்சமாக S$2,000 அபராதம் விதிக்கப்படலாம்.

 

சிங்கப்பூரில் வேலை.. நல்ல சம்பளம்.. எந்த நாட்டினரும் விண்ணப்பிக்கலாம்

சாங்கி விமான நிலையத்தில் இனி புதிய சோதனை: வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் கவனத்திற்கு!