வெறும் S$1 வெள்ளிக்கு விமான பயணம்.. சிங்கப்பூரில் இருந்து 6 இடங்களுக்கு பயணிக்கலாம்

SIA, Scoot discount flights tickets
Pic: TODAY

சிங்கப்பூரில் இருந்து வெறும் S$1 வெள்ளிக்கு விமானத்தில் பயணம் செய்ய ஆசையா, அப்படியென்றால் உங்கள் கனவு நினைவாக போகிறது.

அதாவது சாங்கி ஏர்போர்ட் குழுமம் (CAG) ஒரு புதிய போட்டியை உங்களுக்காக அறிமுகம் செய்துள்ளது.

பணிப்பெண்ணை தீர்த்துக்கட்டி சொந்த நாட்டுக்கு தப்பி ஓட்டம்.. வெளிநாட்டு ஊழியரை தேடிவரும் இன்டர்போல்

“Shall We Just Go?” என்று சொல்லப்படும் அந்த போட்டியில் வெற்றிபெறும் நபர்கள் 30 நாட்களுக்குள் பயணிக்க தயாராக இருக்க வேண்டும்.

வெற்றிபெறும் அதிர்ஷ்டசாலிகள் வெறும் S$1 செலுத்தி அறிவிக்கப்படாத ஆறு ரகசிய இடங்களுக்குச் செல்லலாம்.

இந்த பரிசுத் தொகுப்பில் விமான டிக்கெட்டுகள் மற்றும் தங்குவதற்கான S$500 மதிப்புள்ள Trip.com வவுச்சர்கள் ஆகியவை அடங்கும்.

12 வாரம் நடைபெறும் இந்த போட்டியில், ஆறு இரகசியமாக இடங்களுக்கு சாங்கி விமான நிலையத்திலிருந்து நேரடி விமானங்கள் இயக்கப்படும் என்றும், நான்கு மணிநேரம் பயணம் இருக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாரமும் இரண்டு அதிர்ஷ்ட வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், அவர்களில் ஒருவர் Trust Bank வாடிக்கையாளராக இருக்க வேண்டும்.

இந்த போட்டியில் சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் கலந்துகொள்ளலாம்.

இந்த போட்டியை Trip.com மற்றும் Trust Bank ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

பயணிகளை மேலும் கவர்ந்திழுக்க, ஒவ்வொரு இடத்திற்கும் Trip.com-ல் கவர்ச்சிகரமான சலுகைகளும் வழங்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

இந்த பயண போட்டியில் கலந்துகொள்வோர் முழு விவரத்தை அறிந்துகொள்ளலாம் மற்றும் பதிவு செய்து கொள்ளலாம். இணையத்தளம் 

சிங்கப்பூரில் 36 வயதுமிக்க வெளிநாட்டு ஊழியர் மரணம் – உடலை சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு

Verified by MonsterInsights