பணிப்பெண்ணை தீர்த்துக்கட்டி சொந்த நாட்டுக்கு தப்பி ஓட்டம்.. வெளிநாட்டு ஊழியரை தேடிவரும் இன்டர்போல்

interpol-red-notice-singapore-murder
Photo's: Interpol, right image via Google Streetview

பங்களாதேஷ் ஊழியர் ஒருவர் 2018 ஆம் ஆண்டில் தனது மனைவியை தீர்த்துக்கட்டிவிட்டு சிங்கப்பூரிலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த ஊழியருக்கு Red Notice என்னும் சிவப்பு எச்சரிக்கை அறிக்கையை இன்டர்போல் வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் 36 வயதுமிக்க வெளிநாட்டு ஊழியர் மரணம் – உடலை சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு

அவர் சிங்கப்பூர் அரசாங்கத்தால் தேடப்பட்டு வருவதாக இன்டர்போல் கூறியுள்ளது.

பணிப்பெண் சடலம்

தெம்பனீஸ் சாலையில் உள்ள வனப் பகுதியில் 2018 ஆம் ஆண்டு செப். 6 அன்று, ஜோனலின் அல்வாரஸ் ரவிஸ் என்ற பணிப்பெண்ணின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

பணிப்பெண் கழுத்தில் இறுக்கமாக கயிறு போன்ற பொருள் கட்டியிருந்ததாகவும், மேலும் அது மரத்திலும் கட்டப்பட்டிருந்ததாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

2019 ஆகஸ்ட் மாதத்தில் நடந்த பிரேத பரிசோதனையின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் அவரது கணவர் ராஜு தாலிக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆனால், ராஜூ 2018 ஆம் ஆண்டு செப். 3 அன்று சிங்கப்பூரில் இருந்து வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவுக்கு புறப்பட்டார்.

சிங்கப்பூரில் பணியாற்றி வந்தார்

ராஜு 2007ம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் பணியாற்றி வந்தார். ராஜு மற்றும் ரவீஸ் இருவரும் 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

ரவிஸ், 2018 ஆம் ஆண்டு செப். 2 அன்று காலை 9 மணியளவில் பாசிர் ரிஸ் இன்டர்சேஞ்சில் ராஜுவைச் சந்தித்தார் என விசாரணையில் சொல்லப்பட்டது.

பின்னர் மாலை 5 மணியளவில், டெஃபு லேன் 1ல் இருந்து ஜூரோங் ரிவெருக்கு அருகில் உள்ள ஜலான் பாப்பான் தங்கும் விடுதிக்கு டாக்ஸியில் ராஜு திரும்பினார்.

பங்களாதேஷ்க்கு புறப்பட்டார்

அதன் பின்னர் மாலையில் விடுதியை விட்டு வெளியேறிய அவர், பங்களாதேஷ்க்கு விமான டிக்கெட்டை வாங்கிக்கொண்டு, 2018 ஆம் ஆண்டு செப்., 3 அன்று அதிகாலை 5:30 மணிக்கு புறப்பட்டார்.

திருமணத்தில் மகிழ்ச்சியில்லை

தன் திருமணத்தில் தனக்கு மகிழ்ச்சியில்லை என்று ரவிஸ் பகிர்ந்து கொண்டதாக ரவீஸின் முதலாளி கூறினார்.

மேலும், ராஜு பணிப்பெண்ணின் சம்பளம் முழுவதையும் அடிக்கடி பிடிங்கி செல்வார் என்றும் அவர் கூறினார்.

மிரட்டல்

தன்னை விட்டு சென்றால் கொலை செய்துவிடுவதாக 2018 ஜூன் மாதம் ராஜு மிரட்டியதாக ரவிஸ் தனது முதலாளியிடம் கூறினார்.

இந்த மிரட்டல் விட்டது குறித்து ரவீஸின் முதலாளி ராஜுவின் நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

போலீசில் புகார்

2018 ஆம் ஆண்டு செப். 2 அன்று ரவிஸ் வீடு திரும்பாத காரணத்தால், அவரது முதலாளி பணிப்பெண்ணை காணவில்லை என போலீசில் புகார் அளித்தார்.

அதே போல 2018 செப். 3 அன்று, ராஜு வேலைக்கு வரவில்லை என ராஜுவின் முதலாளி போலீஸில் புகார் அளித்தார்.

ராஜு ஏதும் கூறாமல் சொந்த நாட்டுக்கு புறப்பட்டு சென்றதாகவும், மேலும் அவரை கைது செய்வதற்கான வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாகவும் மரண விசாரணை அதிகாரி கூறினார்.

இந்நிலையில், அவருக்கு Red Notice கொடுத்து இன்டர்போல் தேடிவருகிறது.

ஒர்க் பெர்மிட்டில் குறிப்பிட்ட வேலையை பார்க்காமல் வேறு வேலையை பார்த்தவருக்கு செக்