“பயிற்சி இல்லாத வேலையை பார்க்க சொன்னா என்ன பண்றது” – இரு ஊழியர்களின் மரணமும்.. நிறுவனத்தின் அஜாக்கிரதையும்..

workers safety lapses death 2 jailed mom
(Photo: Ministry of Manpower)

வேலையிடத்தில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக தனித்தனி சம்பவங்களில் ஊழியர்களின் மரணத்திற்கு காரணமாக அமைந்த இருவர் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதாக மனிதவள அமைச்சகத்தின் (MOM) நேற்று முன்தினம் கூறியது.

இதனால் டிங் தேஜு என்பவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 12, அன்று எட்டு மாத சிறைத்தண்டனையும், செயோக் கோக் சாவு என்பவருக்கு டிசம்பர் 22, அன்று ஐந்து மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

பொதுப் போக்குவரத்தில் பயணிப்போர் கவனத்திற்கு.. ஜூன் 1 முதல் இதை மட்டுமே பயன்படுத்த முடியும்

Siong Construction and Engineering நிறுவனத்தின் தள மேற்பார்வையாளராக டிங் பணிபுரிந்தார். ஆகஸ்ட் 3, 2020 அன்று, தற்காலிக சேமிப்பு இடத்தை வேறு இடத்திற்கு மாற்றும்படி 11 ஊழியர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

அதில் ஒரு ஊழியர், சுமார் 6 மீ உயரத்தில் இருந்து விழுந்தார். பின்னர் அவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அதே நாளில் அவர் இறந்தார்.

மற்றொரு ஊழியர் மரணம்

மற்றொரு சம்பவத்தில், Synergy-Biz நிறுவனத்தின் இயக்குநராக செயோக் கோக் பணிபுரிந்தார்.

ஆகஸ்ட் 25, 2022 அன்று, வேலையிடத்திலிருந்து ஃபோர்க்லிஃப்டை லாரி மூலம் வெளியே கொண்டு செல்லும் பணியை திரு டான் தியோங் சீ என்ற ஊழியர் மேற்கொண்டார்.

அப்போது ஃபோர்க்லிஃப் முன்னோக்கி உருண்டு அவர் மீது விழுந்ததில் அவருக்கு கடும் காயம் ஏற்பட்டது.

அதன் பின்னர் அவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அதே நாளில் அவரும் காயங்கள் காரணமாக இறந்தார்.

ஃபோர்க்லிஃப்டை ஏற்றி இறக்க முறையான பயிற்சி அவருக்கு வழங்கப்படவில்லை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.

இந்த இரண்டு மரணங்களும் வேலையிட பாதுகாப்பு குறைப்பாட்டை வெளிப்படையாக பிரதிபலிக்கிறது.

மேலும், “மற்றவர்களின் உயிரைப் பணயம் வைக்கும் இதுபோன்ற முதலாளிகள் மற்றும் ஊழியர்களை MOM தீவிரமாகக் கண்காணிக்கிறது, மேலும் தவறுக்கு காரணமானவர்களைத் தண்டிக்கவும் தயங்கமாட்டோம்” என அது கூறியது.

சிங்கப்பூரில் S$1.17 மில்லியன் ஜாக்பாட் பரிசைத் தட்டி தூக்கிய அதிஷ்டசாலி – துள்ளிக்குதித்து ஆரவாரம்