சிங்கப்பூரில் புதிதாக 3 தொற்றுக் குழுமங்கள் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் அடையாளம்

வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் வேலை
Photo: Roslam Rahman/AFP/Getty Images

சிங்கப்பூரில் புதிதாக மேலும் 3 தொற்றுக் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அந்த மூன்றும் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வந்த பாலாஜி, ஆதில் என்ற இரண்டு அரிய இளம் ஒட்டகச்சிவிங்கிகள்!

மொத்தம் 12 குழுமங்களை அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

துவாஸ் சவுத் மற்றும் கியான் டெக் ஆகிய வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் புதிதாக நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

துவாஸ் சவுத் தங்கும் விடுதியில் புதிதாக 7 பேர் உட்பட மொத்தம் 22 நோய்த்தொற்று சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதே போல, கியான் டெக் தங்கும் விடுதியில் புதிதாக 10 பேர் உட்பட மொத்தம் 60 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

உள்-விடுதிக்குள் நோய்ப்பரவல் இருப்பதாகவும், அது சமூக அளவில் பரவவில்லை என்றும் MOH கூறியுள்ளது.

மேலும், ப்ளூ ஸ்டார்ஸ், உட்லண்ட்ஸ், நார்த் கோஸ்ட் மற்றும் தெம்பனீஸ் ஆகிய வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் புதிய சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் தொற்று நோயால் 8 பேர் உயிரிழப்பு – செப் மாதத்தில் மட்டும் இதுவரை 38 இறப்புகள் பதிவு