செல்லுபடியாகும் “Work pass” இல்லாமல் 8 ஆண்டுகள் வேலை – நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

(Photo: TODAY)

வெளிநாட்டு மருத்துவரை முறையான Work pass அனுமதி இல்லாமல் தங்கள் விற்பனை நிலையங்களில் வேலை செய்ய வைத்த 12 கிளினிக்குகள் மீது இன்று (ஜூலை 29) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மற்றும் 2019ஆம் ஆண்டு மே மாதம் இடையில், செல்லுபடியாகும் Work pass இல்லாமல் டாக்டர் குவெக் கியான் கெங்கை வேலை செய்ய தூண்டியதாக கிளினிக்குகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு தலா S$50 பணத்தை வழங்கிய முகம் காட்டாத பெண்மணி

நீதிமன்ற ஆவணங்களின்படி 12 கிளினிக்குகளின் பட்டியல்:

  • Pacific Family Clinic
  • My Family Clinic (TH)
  • My Family Clinic (RV)
  • My Family Clinic (Hougang Central)
  • Prohealth Medical Group @ LRT Fernvale
  • Silver Cross Healthcare
  • Ihealth
  • Healthway Medical Group
  • Health 2.0
  • CMI Lifemed
  • CMI Health Services
  • Avermed

டாக்டர் குக் முறையான வேலை அனுமதி இல்லாத நிலையில் பணிபுரிந்ததாகக் கூறப்படும் அந்த கிளினிக்குகள், ஜூராங் வெஸ்ட், ஹௌகாங், கிளெமென்டி, செங்காங், உட்லேண்ட்ஸ், பொங்க்கோல், பெடோக் மற்றும் ரெட்ஹில் ஆகிய இடங்களில் உள்ளன.

இந்நிலையில், வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டத்தின்கீழ் அந்த கிளினிக்குகள் மீது தலா இரண்டு முதல் எட்டுக்கு இடைப்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதி உட்பட புதிதாக 4 தொற்று குழுமங்கள்…