“12 வயது சிறுமியை ஏழு நாட்களாக காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

"12 வயது சிறுமியை ஏழு நாட்களாக காணவில்லை"- தகவல் கொடுக்குமாறு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!
Photo: Singapore Police Force

 

சிங்கப்பூரில் 12 வயது சிறுமியை ஏழு நாட்களாகக் காணவில்லை என்றும், தகவல் கொடுக்குமாறும் பொதுமக்களுக்கு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

வாகனம் மோதி சிறுவன் மரணம் – ஓட்டுனருக்கு சிறை, அனைத்து வகுப்பு ஓட்டுநர் உரிமமும் ரத்து

சிங்கப்பூர் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூரில் வசித்து வந்த 12 வயது சிறுமியை கடந்த டிசம்பர் 15- ஆம் தேதி நண்பகல் 12.00 மணி முதல் காணவில்லை. இவர் கடைசியாக, புளோக் 213 பூன் லே டிரைவ் (Blk 213 Boon Lay Drive) பகுதியில் காணப்பட்டுள்ளார்.

‘கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகள் 2023’: திருச்சி- சிங்கப்பூர் இடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

மிக்கி மவுஸ் டிசைனுடன் (Mickey Mouse Design) கூடிய வெள்ளை நிற சரட்டையும், பச்சை நிற பேண்ட்டையும் அணிந்திருந்துள்ளார். இந்த சிறுமியை யாராவது பார்த்தாலோ (அல்லது) சிறுமி குறித்து தகவல் கிடைத்தாலோ உடனடியாக சிங்கப்பூர் காவல்துறையின் 999 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் பதிவுடன் காணாமல் போன சிறுமியின் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்துள்ளது சிங்கப்பூர் காவல்துறை.