சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் பெண் உட்பட 13 பேர் கைது.!

13 people investigated illegal gambling
Pic: SPF

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பெயரில், 13 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் அந்த சந்தேக நபர்களில், ஒரு பெண் உட்பட 12 ஆண்கள் அடங்குவர், அவர்கள் அனைவரும் 36 முதல் 69 வயதுக்கு இடைப்பட்டவர் ஆவார்கள்.

ஜூரோங் காவல்துறை பிரிவினர் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி நள்ளிரவு 1:45 மணி அளவில் புக்கிட் பாத்தோக் கிரசென்ட்டில் (Bukit Batok Crescent) உள்ள வணிகக் கட்டிடத்தில் சோதனை நடத்தினர்.

சிங்கப்பூர், இந்தியாவிலிருந்து ஆக்சிஜனை இறக்குமதி செய்ய முடிவு செய்த நாடு..

அப்போது, அங்கிருந்த 13 பேரும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தேகத்தின் பேரில், கைது செய்யப்பட்டனர்.

மேலும், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள், பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகளை மீறியதற்காகவும் விசாரிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள அந்த 13 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்டவிரோதமாக ஓரிடத்தில் கூட்டம் கூடி சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 50,000 வெள்ளி அபராதமும், மூன்று ஆண்டு வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

கோவிட்-19 பரிசோதனை சாதனத்தில், உங்களுக்கானது எது என அறிந்து கொள்ளுங்கள்!