கோவிட்-19 பரிசோதனை சாதனத்தில், உங்களுக்கானது எது என அறிந்து கொள்ளுங்கள்!

கோவிட்-19 கிருமித் தாெற்று பொதுவாக நீங்கள் செல்லக்கூடிய உணவு அங்காடியிலிருந்தோ, விமானத்திலிருந்தோ அல்லது உல்லாச கப்பலிலிருந்தோ உங்களிடம் தாெற்றிக் கொள்ளலாம்.

தடுப்பூசி போட்டுகாெள்ளாத முதியவர்களிடமிருந்தாே, வெளியில் விளையாட செல்லக்கூடிய சிறுவர்களிடமிருந்தோ தங்களுக்கு தாெற்றிக் காெள்ளுமோ என நீங்கள் பயப்பட வேண்டாம்.

வெளிநாட்டு ஊழியரிடம் அதிக தொகை பெற்றுக்கொண்ட சலூன் – போலீசில் புகார்

இதுபோன்ற சூழ்நிலைகளில் இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்வதற்கும், நீங்கள் மன அமைதி பெறுவதற்கும் கோவிட்-19 ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனை (ART) செய்யக்கூடிய சுய பரிசோதனை சாதனங்கள் இனி உங்களுக்கு உதவும்.

இந்த சுய பரிசோதனை சாதனங்கள் உங்களுக்கு நம்பிக்கையான முடிவுகளை தரலாம். ஏனெனில், இத்தகைய சுய பரிசோதனை சாதனங்கள் ஐந்திற்கு சுகாதார அறிவியல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. அந்த சாதனத்தின் விலைகள் 8 வெள்ளி முதல் 13 வெள்ளி வரை உள்ளது.

பொதுவாக 5 பரிசோதனை சாதனங்களிலும் ஒரு சில குறைபாடுகள் உள்ளன. இருப்பினும், அதில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தவும், ஒரு நேரத்தில் கூடுதல் நபர்களைச் சோதிக்க முடிவதாகவும் அமைந்தது “எஸ்டி பயோசென்சர் ஸ்டான்டர்ட் கியூ” (SD Biosensor Standard Q Covid-19 Ag Home Test).

இச்சாதனத்தைப் பயன்படுத்தும் வழிமுறையை விளக்கும் காணொளி எல்லோருக்கும் புரியும் வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனையில் ஒழுங்குமுறையுடன் பொருட்களை வைத்திருக்க “எபோட் பேன்பயோ” (Abbott Panbio) மற்றும் “குவி டெல் குவிக்வியூ அட் ஹோம் ஓடிசி கோவிட்-19 டெஸ்ட்” (Quidel Quick Vuc at Home OTC Covid-19 Test) ஆகிய பரிசோதனை சாதனங்கள் மிக உதவுகின்றன. இவ்விரண்டுக்கும் பயன்படுத்துவதற்கான வழிமுறை தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

“குவி டெல் குவிக்வியூ” சாதனம் வெளிப்புற பயன்பாட்டிற்கு ஏதுவாக உள்ளது. ஆனால் இதைப் பயன்படுத்துவோர், சிறிது நேரம் நிறுத்திக் காத்திருந்துவிட்டு மீண்டும் தொடர வேண்டும். மற்ற சாதனங்களுக்கு இதுபோல் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

விபரம் தெரிந்தவர்கள் கண்காணிப்பதற்கு இல்லாத நிலையில், வீட்டிலிருக்கும் மற்றவர்களும் எளிதில் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் சாதனம் “எஸ்டி பயோசென்சர் ஸ்டான்டர்ட் கியூ கோவிட்-19 ஏஜி ஹோம் டெஸ்ட்” மற்றும் “எஸ்டி பயோசென்சர் சார்ஸ்காெவ்-2 ஆன்டிஜன் செல்ஃப் டெஸ்ட் நேசல்” (SD Biosensor Sars-CoV-2 Antigen Self Test Nasal) ஆகும். இச்சாதனங்களின் QR Code யை பயன்படுத்தினால், இதற்கான விளக்க காணாெளியைப் பார்க்க இயலும்.

ஐந்தாவது பரிசோதனை சாதனமான “பிடி வெரிட்டர் அட் ஹோம் கோவிட்-19 டெஸ்ட்” மட்டும் தற்போது நிறுவனங்களுக்காக விற்பனைச் செய்யப்படுகிறது.

சட்டத்திற்கு புறம்பாக முகக்கவசங்களை பெற்றதாக 5 பேர் மீது குற்றச்சாட்டு