சட்டத்திற்கு புறம்பாக முகக்கவசங்களை பெற்றதாக 5 பேர் மீது குற்றச்சாட்டு

Mothership/Joshua Lee

சட்டத்திற்கு புறம்பாக முகக்கவசங்களை பெற்ற, 34 மற்றும் 59 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Temasek அறக்கட்டளை நிறுவியுள்ள இயந்திரங்களில் இருந்து, NRIC மற்றும் FIN எண்களைத் தவறாகப் பயன்படுத்தி முகக்கவசங்களை பெற்றதாக சந்தேகத்தின்பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செராங்கூன் பகுதியில் தீடீர் தீ விபத்து: தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கிய குடியிருப்பாளர்கள்.!

அவர்களில் 59 வயதுமிக்க ஆடவர் ஒருவர், 200க்கும் மேற்பட்ட முகக்கவசங்களை அந்த இயந்திரங்களில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக பெற்றுள்ளார்.

இதே போன்று சட்டத்திற்கு புறம்பாக 300க்கும் மேற்பட்ட முகக்கவசங்கள் அந்த இயந்திரங்களில் இருந்து பெறப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420ன் கீழ் மோசடி குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் மற்றும் அபராதமும் விதிக்கப்படலாம்.

புதிய தோற்றம் மற்றும் அதிநவீன வசதியாக மாறும் சிங்கப்பூர் எக்ஸ்போ வளாகம்