புதிய தோற்றம் மற்றும் அதிநவீன வசதியாக மாறும் சிங்கப்பூர் எக்ஸ்போ வளாகம்

காேவிட்-19 காரணமாக அதிகளவில் மக்கள் கூடும் எந்தவொரு நேரடி நிகழ்ச்சிகளும் நடைபெறாத நிலையில், அந்நிகழ்ச்சிகள் நடைபெறும் சிங்கப்பூரின் முக்கிய பெரிய வளாகங்களில் ஒன்றான சிங்கப்பூர் எக்ஸ்போவின் பாெழுதுபோக்கு காரோட்டத் தடம், உட்புற பேட்மிண்டன் விளையாட்டு அரங்கம் மற்றும் உணவு பானத் துறைகளைச் சேர்ந்த சில பகுதிகள் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

அவை அடுத்த சில வாரங்களில் திறக்கப்படவும் உள்ளன. சிங்கப்பூர் எக்ஸ்போவின் இந்த புதுபிக்கும் பணி கடந்த மார்ச் மாதத்திலிருந்து நடைப்பெற்று வருகிறது.

அட்டவணை முறைப் பரிசோதனையில் தெரியவந்த வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதி குழுமம்.!

300 கார்களை நிறுத்தும் அளவிற்கு இடம் கொண்ட கார் நிறுத்துமிடம் கோ கார்ட் கார்த்தடமாக மாற்றப்பட்டுள்ளது.

இவ்விடத்தை கேஎஃப்1 கார்ட்டிங் எனும் நிறுவனம் நடத்தும், மேலும் இதே போன்று கிராஞ்சியில் உள்ள குதிரைப் பந்தய மன்றத்தில் அமைந்திருக்கும் கோ கார்ட் ஓட்டத் தடத்தையும் இந்நிறுவனம் நடத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் எக்ஸ்போவில் தொடங்கப்படும் இத்தடத்தில் சுமார் 15 கோ கார்ட் வாகனங்கள் வரை இயங்க வசதியுள்ளதாகவும், ஓராண்டு கால உரிமம் பெற்று தடம் நடத்தப்படலாம் என தெரியவந்துள்ளது.

மற்றொரு கார் நிறுத்துமிடமான எக்ஸ்போ கட்டிடத்தின் நான்காம் மற்றும் ஆறாவது கூடங்களுக்கு வெளியே உள்ள கார்நிறுத்துமிடங்களில் டிம்பர்+ உணவு நிலையம் அமைப்பதற்கான புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் ஆறாவது கூடத்தில் அமைக்கப்படும் புதிய பேட்மிண்டன் அரங்கத்தில் 22 விளையாட்டு பகுதி அமைக்கப்படும் என்றும், சிங்கப்பூரின் ஆகப்பெரிய பேட்மிண்டன் அரங்கமாக இது இருக்கும் என்றும், இதே போன்று சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் உள்ள முதல் கோ கார்ட் தடமாக, புதிதாக அமைக்கப்பட்ட தடம் இருக்கும் எனவும் கேஎஃப்1 நிறுவனத்தை நடத்தும் அரினா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ரிச்சர்ட் டான் தெரிவித்தார்.

இந்த புதிய கோ கார்ட் தடம் அமைக்க கிட்டத்தட்ட S$1 மில்லியன் முதலீடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு