செராங்கூன் பகுதியில் தீடீர் தீ விபத்து: தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கிய குடியிருப்பாளர்கள்.!

Serangoon residents help SCDF
Pic: Mothership reader

சிங்கப்பூரில் உள்ள செராங்கூன் சென்ட்ரல் (Serangoon Central) பகுதியில் வைக்கப்பட்டிருந்த மறுசுழற்சி தொட்டி ஒன்றில், நேற்று (ஆகஸ்ட் 15) மதியம் தீடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) தகவல் அளித்தனர்.

SCDF படையினருக்கு தகவல் அளித்த அதே வேளையில், தீயணைப்பு வீரர்கள் வரும் முன், அங்கிருந்த குடியிருப்பாளர்கள் தீ அணைப்பான்களை கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அட்டவணை முறைப் பரிசோதனையில் தெரியவந்த வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதி குழுமம்.!

அந்த குடியிருப்பு பகுதிக்கு அருகிலுள்ள 7-லெவனில் இருந்து ஒரு தீயணைப்பானையும், பக்கத்து வீட்டிலிருந்து மற்றொன்று தீ அணைப்பானையும் கொண்டு குடியிருப்பாளர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினார்.

ஆனால், குடியிருப்பாளர்களிடம் தீயை அணைக்கும் கருவிகள் போதுமானதாக இல்லை. இந்நிலையில், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் சரியான நேரத்தில் வந்து அங்கு தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில், யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு.!