சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு.!

Pic: REUTERS

சிங்கப்பூர்வாசிகளில் சுமார் 75 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என்றும், மேலும் சிங்கப்பூர்வாசிகளில் 81 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி ஒருமுறை போடப்பட்டுள்ளது என்றும் சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 13) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் நேற்று முன்தினம் நிலவரப்படி, மொத்தம் 8.34 மில்லியன் முறை தடுப்பூசி, சுமார் 4.41 மில்லியன் பேருக்கு போடப்பட்டுள்ளது என்றும், அவர்களில், 4,06 மில்லியன் பேருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் MOH கூறியுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு

மேலும், உலகச் சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட மற்ற தடுப்பு மருந்துகள் 1,45,688 முறை செலுத்தப்பட்டுள்ளது என்றும், 83,000-க்கும் மேற்பட்டோர் அந்தத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் கடந்ந ஆகஸ்ட் 10 முதல், COVID-19 தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொள்ளாத அனைத்து சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் மற்றும் நீண்ட கால அனுமதி (long-term pass) வைத்திருப்பவர்கள் தடுப்பூசி நிலையங்களில் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை போட்டுக்கொள்ள முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரத்தை நிரூபிப்பதில் சிரமமாக இருக்கிறதா? இவரின் யோசனையை பாருங்கள்.!