தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரத்தை நிரூபிப்பதில் சிரமமாக இருக்கிறதா? இவரின் யோசனையை பாருங்கள்.!

vaccination-report-t-shirt
S'pore man becomes walking vaccination report (hyneo/Instagram)

உங்களுடைய தடுப்பூசி குறித்த நிலையை மற்றவர்கள் சரிபார்க்க TraceTogether செயலியை திறப்பது மிகவும் சிரமமாக இருக்கிறதா? சிங்கப்பூரரின் யோசனையை பாருங்கள்.

இன்ஸ்டாகிராம் பயனர் @hyneo என்பவர், தனது தடுப்பூசி அறிக்கையை வித்தியாசமாக தன்னுடைய டி-ஷர்ட்டில் அச்சடித்துள்ளார்.

இந்த புதிய முயற்சியின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளார்.

கோவிட்-19 தொற்றுநோயால் 3 வயது சிறுமி இறந்துவிட்டதாக பொய்யான செய்தி

அவரின் டி-ஷர்ட் முழுவதிலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரம், அவர் எடுத்துக்கொண்ட தடுப்பூசியின் வகை (பைசர்-பயோஎன்டெக்/கொமர்னாட்டி) மற்றும் அவர் தடுப்பூசி போட்டுக்கொண்ட தேதிகள் (ஏப்ரல் 25 மற்றும் மே 16) குறிப்பிடப்பட்டு இருந்தன.

(hyneo/Instagram)

“உணவகங்களில் அமர்ந்து சாப்பிடுவது நேற்று மீண்டும் துவங்கப்பட்டது. ஆகவே, நீங்கள் ஏற்கனவே தடுப்பூசி போட்டுகொண்டுள்ளீர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். எனவே இதை நான் அச்சிட்டேன்” என்று அவர் பதிவில் கூறியுள்ளார்.

“இந்த இரண்டு நாட்கள் உணவருந்தும்போது, எந்த கேள்வியும் கேட்கப்படவில்லை. தடுப்பூசி போட்டுகொண்டு பாதுகாப்பாக இருங்கள் ” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

வெளிநாட்டு ஊழியர்களின் வேலை அனுமதி நீட்டிப்பு – நிறுவனங்கள் வரவேற்பு