வெளிநாட்டு ஊழியர்களின் வேலை அனுமதி நீட்டிப்பு – நிறுவனங்கள் வரவேற்பு

lightning strike 3 construction workers hospital
Pic: Getty Images

சிங்கப்பூரில் கட்டுமானம் மற்றும் கப்பல் போன்ற துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களின் வேலை அனுமதியை, மேலும் 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுடன் காலாவதியாகி புதுப்பிப்புக்கான தகுதிகளைப் பூர்த்திசெய்ய தவறினாலும், அவர்களுக்கு வேலை அனுமதி நீட்டிக்க அனுமதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊழியர்கள் அதிகளவில் கிடைக்காததால், ஆசிய கட்டுமானத் துறையில் சிங்கப்பூர் 4வது இடம்

இந்த அறிவிப்பு தற்போதைய சூழலில் ஓரளவுக்கு உதவிபுரியும் என்று கட்டுமான நிறுவனங்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.

தற்போதைய மனிதவள பற்றாக்குறையை சமாளிக்கவும் இது உதவும் என்றும் அவைகள் கூறுகின்றன.

வேலையில் இருப்பதற்கான அதிகபட்ச காலத்தை எட்டுபவர்களுக்கும், வயது வரம்பை எட்டுபவர்களுக்கும் இது பொருந்தும்.

நிறுவனங்கள் இந்த இக்கட்டான நிலைமையைச் சமாளிக்கும் விதமாக அரசு தற்போது இந்தச் சலுகையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விதிகளை மீறிய கடல்துறை நிறுவனங்களின் உரிமம் பறிமுதல் – தனி நபர்களுக்கு அபராதம்