விதிகளை மீறிய கடல்துறை நிறுவனங்களின் உரிமம் பறிமுதல் – தனி நபர்களுக்கு அபராதம்

கோவிட்-19ன் நிர்வாக தடைவிதிகளை மீறியதற்காக கடல்துறையைச் சார்ந்த 52 நிறுவனம் மற்றும் தனிப்பட்டவர்களுக்கு தலா S$300 முதல் S$3000 வரை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2 நிறுவனங்களின் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது சிங்கப்பூர் கடல்துறை துறைமுக ஆணையம்.

சிங்கப்பூரில் கிருமித்தொற்று காரணமாக 44வது மரணம்!

துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல்கள், உல்லாசக் கப்பல்கள் மற்றும் கடற்பயணத்தில் ஈடுபட்டிருந்த கப்பல்களில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் ஜுன் வரை விதிகளை மீறியுள்ளது ஆணையத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை காட்டிலும் அதிகமானோர்களை உல்லாசக் கப்பல்களில் ஏற்றியதும், கடலோரக் கப்பல்துறை வேலையாட்கள் சரியான பாதுகாப்புச் சாதனங்களை பயன்படுத்தவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், பல விதிமீறல் சம்பவங்கள் குறித்து ஆணையம் விசாரணை நடத்துவதாக கூறியது.

கோவிட்-19 தற்காலிக சட்டம் 2020ன் கீழ், விதிகளை மீறுபவர்களுக்கு 6 மாதம் சிறைதண்டனையும் S$10,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.

மறுபடியும் விதிமீறல்களில் ஈடுபட்டால் அபாரம் S$20,000 அதிகரிக்கப்படும், விதிமீறல்களில் ஈடுபட்ட கப்பலின் உரிமம் 30 நாட்கள் வரையில் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

இதனால் கோவிட்-19 தொடர்பான விதிமுறைகளை ஊழியர்கள் கடுமையாக பின்பற்ற வேண்டுமென ஆணையம் தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது.

சிங்கப்பூரில் அதிகரிக்கும் வெப்பநிலை: கட்டுமான ஊழியர்கள் அதிகம் பாதிப்படையலாம்!