சிங்கப்பூரில் கிருமித்தொற்று காரணமாக 44வது மரணம்!

84 year Singaporean died
Pic: Ili Nadhirah Mansor

கொரோனா கிருமித்தொற்று காரணமாக 84 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் நேற்று (ஆகஸ்ட் 13) தெரிவித்துள்ளது.

COVID-19 கிருமித்தொற்று அறிகுறிகள் கடந்த மாதம் 28ம் தேதி அந்த முதியவருக்கு தென்பட்டது. இதையடுத்து, அவர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

சிங்கப்பூரில் அதிகரிக்கும் வெப்பநிலை: கட்டுமான ஊழியர்கள் அதிகம் பாதிப்படையலாம்!

புற்றுநோய், இதய நோய், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகிய நோய்களால் அந்த முதியவர் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

கிருமித்தொற்றால் உயிரிழந்த அந்த 84 வயது முதியவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்று காரணமாக ஏற்பட்ட இறப்புகளின் மொத்த எண்ணிக்கை 44ஆக உயர்ந்துள்ளது, முதியவரையும் சேர்த்து இந்த மாதத்தில் மட்டும் கிருமித்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் கொரோனாவின் தற்போதைய நிலை குறித்து விரிவாகப் பார்ப்போம்!