கோவிட்-19 தொற்றுநோயால் 3 வயது சிறுமி இறந்துவிட்டதாக பொய்யான செய்தி

3-year-old girl death fake news

KK மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் (KKH) கோவிட் -19 நோயால் மூன்று வயது குழந்தை இறந்துவிட்டதாக ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட பதிவை சுகாதார அமைச்சகம் (MOH) மறுத்துள்ளது.

இந்த பதிவை ஃபேஸ்புக் பயனர் Eileen Loh என்பவர் நேற்று (ஆக. 14) பதிவேற்றினார், பதிவிட்ட நான்கு மணி நேரத்தில் 100க்கும் மேற்பட்ட பகிர்வுகளை அது பெற்றது.

வெளிநாட்டு ஊழியர்களின் வேலை அனுமதி நீட்டிப்பு – நிறுவனங்கள் வரவேற்பு

ஃபேஸ்புக் பதிவு

கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி அந்த சிறுமி அதிக காய்ச்சலுடன் K.K மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பின்னர் அச்சிறுமிக்கு கோவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அந்த பதிவில் கூறப்பட்டு இருந்தது.

மேலும், அந்த சிறுமி இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும் அந்த பதிவில் கூறப்பட்டது.

மேலும், சிங்கப்பூர் அரசாங்கம் வேண்டுமென்றே குழந்தையின் மரணம் குறித்து தெரிவிக்க வேண்டாம் என்று முடிவு செய்ததாக அந்த பதிவில் போலியாக குற்றம் சாட்டப்பட்டது.

முற்றிலும் உண்மைக்கு புறம்பானது

பதிவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும், போலியாக உருவாக்கப்பட்ட கட்டுக்கதை என்றும் MOH தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், ஆகஸ்ட் 14 வரை, K.K மருத்துவமனையில் கோவிட் -19 தொற்றால் எந்த குழந்தையும் இறக்கவில்லை என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

“வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை பரப்புவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்” என்று சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

ஊழியர்கள் அதிகளவில் கிடைக்காததால், ஆசிய கட்டுமானத் துறையில் சிங்கப்பூர் 4வது இடம்