“13 வயது சிறுவனை ஏழு நாட்களாக காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்!

Photo: Singapore Police Force

சிங்கப்பூரில் வசித்து வந்த 13 வயதான பிரிதேஸ் ராம் சிவன் குமரன் (Pritesh Ram Sivan Kumaran) என்ற சிறுவனை, கடந்த ஏப்ரல் 12- ஆம் தேதி புதன்கிழமை அன்று முதல் காணவில்லை. கடைசியாக, சிராங்கூன் நார்த் அவென்யூ- 1ல் (Block 146 Serangoon North Avenue 1) உள்ள புளொக் 146ல் அன்றைய தினம் இரவு 07.45 மணிக்கு காணப்பட்டுள்ளார்.

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ள மலேசிய பிரதமர்!

சிறுவனை யாராவது பார்த்தாலோ (அல்லது) அவரைப் பற்றிய தகவல் ஏதேனும் கிடைத்தாலோ 1800- 255-0000 என்ற சிங்கப்பூர் காவல்துறையின் தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம் (அல்லது) www.police.gov.sg/iwitness என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று சிறுவன் குறித்த விவரங்களைச் சமர்ப்பிக்கலாம். தகவல்கள் அனைத்தும் ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பெயரில் போலி இணையதளங்கள்- பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!

எனவே, ஏழு நாட்களாக காணாமல் போன சிறுவனை கண்டுபிடிக்கப் பிடிக்க உதவுமாறு பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் சிங்கப்பூர் காவல்துறை (Singapore Police Force) வேண்டுகோள் விடுத்துள்ளது.