ரமலான் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ள மலேசிய பிரதமர்!

Photo: PM Anwar Ibrahim on Facebook

வரும் ஏப்ரல் 21- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் ரமலான் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், சிங்கப்பூரில் வசிக்கும் மலேசியர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மலேசியாவுக்கு புறப்பட்டு செல்வர் என்பதாலும், மலேசியாவில் இருக்கும் சிங்கப்பூரர்கள் சிங்கப்பூருக்கு வருவர் என்பதாலும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், பல்வேறு முன்னேற்பாடுகளை சிங்கப்பூர்- மலேசியா நாடுகளின் போக்குவரத்துத்துறை அதிகாரிகள், சோதனை சாவடிகளின் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

வேன்- கனரக வாகனம் மோதி விபத்து- ஒருவர் உயிரிழப்பு!

இந்நிலையில், ரமலான் பண்டிகையை இஸ்லாமிய பெருமக்கள் உற்சாகமாகக் கொண்டாடும் வகையில், ஏப்ரல் 21, 22, 23, 24 ஆகிய நான்கு நாட்களுக்கு மலேசியாவில் பொது விடுமுறையாக அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு. அதேபோல், ரமலான் பண்டிகையையொட்டி, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் நேற்று (ஏப்ரல் 18) மதியம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

விமான கண்ணாடியில் திடீர் விரிசல்…. அவசர அவசரமாக விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட விமானம்!

அப்போது அவர் கூறியதாவது, “நோன்பு பெருநாள் காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் செலவைக் குறைக்கும் வகையிலும், மலேசியர்களின் சுமையைக் குறைக்கும் வகையிலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நான்கு பொது விடுமுறை நாட்களில் மலேசியா முழுவதும் உள்ள 33 நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கக் கட்டண சாவடிகளில் அனைத்து விதமான வாகனங்களும் இலவசமாக செல்லலாம். சுங்கக்கட்டணம் ஏதுவும் செலுத்த வேண்டியதில்லை. முற்றிலும் இலவசமாகப் பயணிக்கலாம்” எறு குறிப்பிட்டுள்ளார்.

டோல் கட்டணம் இலவசம் என்ன்ற அறிவிப்பால் சிங்கப்பூரர்கள், மலேசியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.