விமான கண்ணாடியில் திடீர் விரிசல்…. அவசர அவசரமாக விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட விமானம்!

Photo: Air India

ஏப்ரல் 18- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மாலை ஏர் இந்தியா நிறுவனத்திற்கு (Air India) சொந்தமான ‘AI 858’ என்ற விமானம், மகாராஷ்டிரா மாநிலம், புனே சர்வதேச நிலையத்தில் இருந்து 180 பயணிகளுடன் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்துக் கொண்டிருந்த போது, விமானத்தின் கண்ணாடியின் வலதுபுறத்தில் (ஸ்டார்போர்டு பக்கம்) திடீரென சிறிய விரிசல் ஏற்பட்டது.

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண் உயிரிழப்பு….. இழப்பீட்டை வழங்கியது சுகாதாரத்துறை அமைச்சகம்!

இதையடுத்து, விமானத்தின் விமானி உடனடியாக, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். மேலும், விமானத்தை அவசரமாகத் தரையிறக்க அனுமதியும் கோரினார். அதைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, விமானத்தைத் தரையிறக்க அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விமானி பத்திரமாக விமானத்தைத் தரையிறக்கினார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஏர் இந்தியா நிறுவனம், “அந்த விமானம் தேவையான பராமரிப்பு செயல்முறைக்கு உட்படுத்தப்படும், சேதமடைந்த கண்ணாடி மாற்றப்படும். விமானத்தில் பயணம் செய்த ஊழியர்கள் மற்றும் பயணிகள் உள்பட அனைவரும் பாதுகாப்பிக்கவுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளது.

வேன்- கனரக வாகனம் மோதி விபத்து- ஒருவர் உயிரிழப்பு!

இந்த சம்பவம் குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் விரிவான விசாரணையை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.