பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண் உயிரிழப்பு….. இழப்பீட்டை வழங்கியது சுகாதாரத்துறை அமைச்சகம்!

Photo: pfizer- biontech

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் மேடம் ஒன்டல் சார்லின் வர்காஸ் (Madam Ontal Charlene Vargas). இவருக்கு வயது 43. இந்த பெண் சிங்கப்பூரில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 2021- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9- ஆம் தேதி அன்று ‘Pfizer-BioNTech’s’ என்ற நிறுவனத்தின் பூஸ்டர் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டார். அதன்பிறகு, அவரை அங்கேயே 42 நிமிட கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். அப்போது, அவருக்கு எந்த விதமான உடல்நலப் பிரச்சினையும் ஏற்படவில்லை. இதையடுத்து அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மசூதிகளுக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் பேரீச்சம் பழங்களை வழங்கியது இந்து அறக்கட்டளை வாரியம்!

இந்த நிலையில், மறுநாள் (டிசம்பர் 10) காலை உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, டேக்சி மூலம் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு சென்றார். அப்போது, மருத்துவர்களிடம் ‘Pfizer-BioNTech’s’ என்ற மருந்து நிறுவனத்தின் முதல் மற்றும் இரண்டாவது டோஸ்களை செலுத்திக் கொண்டேன். தனக்கு எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை. பூஸ்டர் தடுப்பூசியால் எனக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தனக்கு இதயம் சம்மந்தமான எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினார்.

இதையடுத்து, அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த பெண்ணுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், டிசம்பர் 12- ஆம் தேதி அன்று அந்த பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இந்த நிலையில், டிசம்பர் 13- ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டு நான்கு நாட்களில் பெண் ஒருவர் உயிரிழந்திருப்பது சிங்கப்பூரில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

தெம்பனிஸ் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து- ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதி!

“இந்தாண்டு ஜனவரியில், பிலிப்பைன்ஸில் உள்ள அந்த பெண்ணின் குடும்பம், சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பத்தை அளித்திருந்தது. அந்த விண்ணப்பத்தை சுயேச்சை மருத்துவக் குழு பரிசீலனை செய்தது. அதில் அவரது மரணம் கோவிட் தடுப்பூசியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் மருத்துவக் குழு மதிப்பிட்டது. இதையடுத்து, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 2,25,000 சிங்கப்பூர் வெள்ளி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது” என்று சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.