சோதனையில் பிடிபட்ட 16-44 வயதுக்குட்பட்ட ஆண், பெண்கள் – 131 பேரிடம் போலீசார் விசாரணை

SPF

சிங்கப்பூரில் பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளை மீறியது உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட மொத்தம் 131 பேர் விசாரணையில் உள்ளனர்.

உரிமம் பெற்ற மற்றும் உரிமம் பெறாத பொது பொழுதுபோக்கு மற்றும் இரவு நேர கேளிக்கை விடுதிகளை குறிவைத்து இரண்டு நாள் சோதனை நடவடிக்கை நடைபெற்றது.

சிங்கப்பூரில் இந்த 2022 ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் – வாங்க பார்க்கலாம்!

அதில் 16 முதல் 44 வயதுக்குட்பட்ட ஆண் மற்றும் பெண்கள் அடங்குவர். இதுபோன்ற 29 கடைகள் இந்த சோதனை நடவடிக்கையின்போது பிடிபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த டிசம்பர் 24 முதல் 25 வரை நடத்தப்பட்ட இந்த நடவடிக்கைக்கு, டாங்லின் போலீஸ் பிரிவு தலைமை தாங்கியது.

மேலும், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, சிங்கப்பூர் சுற்றுலா கழகம் மற்றும் நகர்ப்புற மறுசீரமைப்பு ஆணையத்தின் அதிகாரிகள் இதற்கு உதவி செய்தனர்.

சிங்கப்பூரில் 7 ஆண்டுகளாக வேலை…புதுக்கோட்டை வந்த ஊழியர் மாயம் – தேடிவரும் போலீஸ்