“14 வயது சிறுமி, 84 வயது முதியவர் ஆகியோரை காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

Photo: Singapore Police Force Official Twitter Page

சிங்கப்பூர் காவல்துறை (Singapore Police Force) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூரில் வசித்து வந்த வியட்நாமைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த டிசம்பர் 22- ஆம் தேதி அன்று மதியம் 01.00 PM மணியளவில் காணவில்லை. இந்த சிறுமி கடைசியாக, சிமெய் தெரு 3- ல் (vicinity of Simei St 3) காணப்பட்டுள்ளார். இவரை யாரேனும் பார்த்தாலோ (அல்லது) சிறுமியைப் பற்றிய தகவல் கிடைத்தாலோ உடனடியாக, சிங்கப்பூர் காவல்துறையின் 999 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் கொடுக்குமாறு வேண்டுகோள்” விடுத்துள்ளது. அத்துடன், காணாமல் போன சிறுமியின் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்துள்ளது.

சிங்கப்பூரில் களைக்கட்டியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

அதேபோல், சிங்கப்பூர் காவல்துறையின் மற்றொரு ட்விட்டர் பதிவில், “சிங்கப்பூரில் வசித்து வந்த 84 வயது முதியவரை டிசம்பர் 23- ஆம் தேதி அன்று பிற்பகல் 03.25 மணி முதல் காணவில்லை. இவர் கடைசியாக, 9 அப்பர் சாங்கி ரோடு நார்த்தில் (9 Upper Changi Rd North) காணப்பட்டுள்ளார். அப்போது, நீல நிற சட்டை மற்றும் கிரே நிற பேண்ட்டை அணிந்திருந்துள்ளார். இவரை யாரேனும் பார்த்தாலோ, அவரைப் பற்றி தகவல் கிடைத்தாலோ உடனடியாக சிங்கப்பூர் காவல்துறையின் 999 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் கொடுக்கலாம்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. ட்விட்டர் பதிவுடன் காணாமல் போன முதியவரின் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்துள்ளது.