சிங்கப்பூரில் களைக்கட்டியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

Photo: Minister Ng Eng Hen Official Twitter Page

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து, பொதுமக்களுக்கு பரிசுகளை வழங்கி கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சிங்கப்பூரில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட குவாண்டஸ் விமானம் அஸர்பைஜானில் அவசர அவசரமாகத் தரையிறக்கம்!

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (25/12/2022) கொண்டாடப்பட உள்ள நிலையில், தேவாலயங்கள் வண்ணமின் விளக்குகளில் ஜொலிக்கின்றன. குறிப்பாக, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, லண்டன், அமெரிக்கா, கனடா, மலேசியா, சிங்கப்பூர், நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், சிங்கப்பூரில் உள்ள ஆர்ச்சர்ட் சாலை (Orchard Road) வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், முக்கிய சாலைகள் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஆங்காங்கே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரங்கள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சிங்கப்பூரில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் இன்று (24/12/2022) நள்ளிரவு முதல் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தேவாலயங்களில் நடைபெற்று வருகின்றனர். பொதுமக்கள் புத்தாடைகளை வாங்க லிட்டில் இந்தியா உள்ளிட்ட முக்கிய கடைவீதி பகுதிகளில் குவிந்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

மற்றொரு புறம், கிறிஸ்துமஸ் கேக்குகளை வாங்குவதற்காக பேக்கரிகளிலும் கூட்டத்தைக் காண முடிகிறது. பொதுமக்களின் வசதிக்காக பொது போக்குவரத்து சேவையை வழங்கி வரும் எஸ்பிஎஸ் டிரான்ஸிட் பேருந்து சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. நாளை விடுமுறை தினம் என்பதால், சுற்றுலா தளங்களுக்கு பொதுமக்கள் செல்ல எதுவாக சிறப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளையொட்டி, தொடர் விடுமுறை காரணமாக, சிங்கப்பூருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.