சிங்கப்பூரில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட குவாண்டஸ் விமானம் அஸர்பைஜானில் அவசர அவசரமாகத் தரையிறக்கம்!

FILE PHOTO

சிங்கப்பூரின் சாங்கி சர்வதேச விமான நிலையத்தின் (Changi International Airport) முனையம் 1- ல் (Terminal- 1) இருந்து இன்று (23/12/2022) அதிகாலை 12.44 AM மணிக்கு குவாண்டஸ் நிறுவனத்துக்கு (Qantas) சொந்தமான ஏர்பஸ் ஏ380 ரக மற்றும் QF1 என்ற எண் கொண்ட விமானம் பயணிகளுடன் லண்டன் புறப்பட்டது. விமானம் ஜார்ஜியா நாட்டின் (Georgia) தலைநகர் திபிலிசி (Tbilisi) அருகே சென்றுக் கொண்டிருந்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விமானத்தில் பயணி- விமான பணிப்பெண் இடையே கடும் வாக்குவாதம்! (வைரலாகும் வீடியோ)

இதையடுத்து, விமானி விமானத்தை வந்த வழியே 180 டிகிரியில் திருப்பிச் சென்று, அஸர்பைஜான் நாட்டின் பாகுவில் (Baku) உள்ள ஹெய்டர் அலியெவ் சர்வதேச விமான நிலையத்தில் (Heydar Aliyev International Airport) சிங்கப்பூர் நேரப்படி இன்று காலை 11.07 AM மணிக்கு அவசர அவசரமாக, பத்திரமாக விமானத்தைத் தரையிறக்கினார்.

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே, விமானம் தரையிறக்கப்பட்டதாகவும், விமானத்தில் ஏற்பட்ட கோளாறைச் சரிச் செய்யும் பணிகளில் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

குவாண்டஸ் விமானம், சிங்கப்பூரில் இருந்து சுமார் 49 நிமிடங்கள் தாமதமாகவே புறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.