சிங்கப்பூர் சாங்கி கடற்கரையில் 14 வயது சிறுவன் கடலில் மூழ்கி பலி..!

14-year-old boy drowns in waters off Changi Beach, another teenager taken to hospital
14-year-old boy drowns in waters off Changi Beach, another teenager taken to hospital (Screenshots from Berita Mediacorp)

சாங்கி கடற்கரையில் நேற்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 22) நீரில் நீந்தும்போது 14 வயது சிறுவன் ஒருவன் கடலில் மூழ்கி உயிரிழந்தான்.

சிறுவனின் உடலை கரையிலிருந்து 15 மீட்டர் தொலைவில் மீட்டெடுத்ததாக சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை (SCDF) தெரிவித்துள்ளது, மேலும் அந்த சிறுவன் துணை மருத்துவரால் சம்பவ இடத்திலேயே இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக வெளியேற முயன்ற வெளிநாட்டவர் கைது..!

ஊடக அறிக்கையில், நேற்றுப் (ஆகஸ்ட் 22) பிற்பகல் 3.30 மணியளவில் சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததாக SCDF தெரிவித்துள்ளது.

கடலில் மூழ்கிய சிறுவன், கடற்கரையில் மீன்பிடித்தல் மற்றும் நீச்சலடிக்க சென்ற ஆறு ஆண் பதின்ம வயதினரின் குழுவில் ஒருவன், என்று நம்பப்படுகிறது.

அவர்களில் இருவர் கடலில் சிக்கியபோது, மீதமுள்ளவர்கள் உதவிக்காக கூச்சலிட்டுள்ளனர், பின்னர் நேரில் கண்டவர்கள் காவல்துறையை அழைத்துள்ளனர்.

SCDF சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​அவர்கள் இளையர் ஒருவரைக் கரையில் கண்டனர். பின்னர், துணை மருத்துவக் குழுவினர் உதவியோடு அந்த இளையர், சாங்கி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அந்த இளையர் முன்னர் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டார் என்பதை TODAY புரிந்துகொள்வதாக தெரிவித்துள்ளது.

பேரிடர் உதவி மீட்புக் குழுவில் இருந்து வீரர்கள் இரண்டாவது நபரான 14 வயது சிறுவனுக்காக நீருக்கடியில் தேடுதல் நடத்தியதாகவும், அவரது உடலை கரையிலிருந்து 15 மீட்டர் தொலைவில் கண்டெடுத்ததாகவும் SCDF தெரிவித்துள்ளது.

இயற்கைக்கு மாறான அந்த மரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை ஊடக அறிக்கையில் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்ட மிகப்பெரிய தங்கும் விடுதியில் புதிய பாதிப்புகள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg