சிங்கப்பூரில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக வெளியேற முயன்ற வெளிநாட்டவர் கைது..!

Bangladeshi man caught trying to leave Singapore illegally by swimming to Malaysia
Bangladeshi man caught trying to leave Singapore illegally by swimming to Malaysia (Photo: ICA)

சிங்கப்பூரில் இருந்து மலேசியா நோக்கி நீந்திச் செல்ல முயன்ற பங்களாதேஷ் ஆடவர் ஒருவர் உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடி அதிகாரிகளிடம் பிடிபட்டார்.

இந்த சம்பவம் கடந்த 18ஆம் தேதி நடந்தது என்று ICA அதன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்ட மிகப்பெரிய தங்கும் விடுதியில் புதிய பாதிப்புகள்..!

குடிவரவு மற்றும் சோதனைச் சாவடி ஆணையத்தின் (ICA) பேஸ்புக் பக்கத்தில் உள்ள பதிவின் படி, சட்டவிரோதமாக சிங்கப்பூரை விட்டு வெளியேற முயன்ற 35 வயதான அந்த ஆடவர், ஆபத்தான ஆயுதங்கள் மூலம் தானாக முன்வந்து காயம் விளைவித்ததன் தொடர்பில் விசாரணையில் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.

You ‘sinking’ of escaping? ??On 18 Aug, checkpoint officers at Woodlands Checkpoint foiled a male Bangladeshi’s…

Posted by Immigration & Checkpoints Authority on Friday, August 21, 2020

இதுபோன்ற சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைய அல்லது வெளியே செல்வதற்கு முயற்சிப்பவர்கள் மீது ICA கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

குடிவரவு சட்டத்தின் கீழ் (Cap 133), சட்டவிரோதமாக வெளியேறிய குற்றத்திற்கு, S$2,000 வரை அபராதம், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர்களுக்கான வழக்கமான கிருமித்தொற்று சோதனை – முதலாளிகள் உறுதிசெய்ய வேண்டும்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg