வெளிநாட்டு ஊழியர்களுக்கான வழக்கமான கிருமித்தொற்று சோதனை – முதலாளிகள் உறுதிசெய்ய வேண்டும்..!

Employers must ensure that workers undergo routine COVID-19 swab test by Sep 5
(REUTERS/Edgar Su)

பாதுகாப்பான மறுதொடக்கத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழக்கமாக மேற்கொள்ளப்படும் கிருமித்தொற்று சோதனைகளை முதலாளிகள் இனி உறுதிசெய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 14 நாட்களில், அதாவது செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் தங்கள் ஊழியர்களுக்கு COVID-19 Swab பரிசோதனையை முடித்திருப்பதை முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் தங்கும் விடுதி நடத்துனர்களுக்கு ஆதரவளிக்க புதிய பிரிவு..!

அவ்வாறு செய்யாத ஊழியர்கள் பணிக்கு திரும்ப முடியாது என்று மனிதவள அமைச்சகம் (MOM), கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையம் (BCA), பொருளியல் வளர்ச்சிக் கழகம் (EDB) மற்றும் சுகாதார மேம்பாட்டு வாரியம் (HPB) கூட்டு செய்தி வெளியீடு தெரிவித்துள்ளன.

தங்கும் விடுதிகளில் வசிக்கும் ஊழியர்கள் மற்றும் கட்டுமான, கடல் மற்றும் செயல்முறைத் துறைகளில் உள்ளவர்கள், அதே போல் பணித் தளங்களுக்குச் செல்வோர், ஒவ்வொரு 14 நாட்களுக்கும் ஒரு முறை வழக்கமான கிருமித்தொற்றுச் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இதுவரை, சுமார் 16,000 முதலாளிகள் தங்கள் ஊழியர்களை HPBயின் swab பரிசோதனை பதிவு செய்யும் முறையைப் பயன்படுத்தி வழக்கமான சோதனைக்கு பதிவு செய்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தும் சிங்கப்பூர் – SIA, சாங்கி விமான நிலையம் வரவேற்பு..!

மேலும், இந்த வழக்கமான பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய சுமார் 102,000 ஊழியர்கள் இன்னும் Swab பரிசோதனைக்கு பதிவுசெய்யப்படவில்லை.

பலமுறை நினைவு படுத்தியபோதும், வழக்கமான சோதனைக்கு உட்படுத்தத் தவறிய நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் குழு மீது BCA நடவடிக்கை எடுத்துள்ளது.

சுமார் 280 ஊழியர்கள் பணிக்கு திரும்புவதற்கான ஒப்புதல் பெற்றனர், மேலும் அவர்கள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பணிக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்.

சோதனை செய்யாத ஊழியர்கள், சிவப்பு நிறக் குறியீட்டின் கீழ் வைக்கப்படுவர், மேலும் அவர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்ப முடியாது என்றும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் தொடர்ந்து அதிகரித்து வரும் குணமடைந்தோர் எண்ணிக்கை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg