வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் தங்கும் விடுதி நடத்துனர்களுக்கு ஆதரவளிக்க புதிய பிரிவு..!

New MOM division to provide support to migrant workers, dormitory operators
(Photo: ROSLAN RAHMAN/AFP via Getty Images)

சிங்கப்பூரில் COVID-19 தொற்றுநோய் சூழலில், வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் தங்கும் விடுதி நடத்துனர்களுக்கு ஆதரவளிக்க அமைச்சகத்தின் புதிய பிரிவு அமைக்கப்படும் என்று மனிதவள அமைச்சகம் (MOM) அறிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் தங்கும் விடுதி நடத்துனர்களுக்கு ஆதரவாக ஏப்ரல் தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட பணிக்குழுவின் செயல்பாடுகளை, Assurance, Care and Engagement (ACE) என்ற புதிய குழு எடுத்துக் கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தும் சிங்கப்பூர் – SIA, சாங்கி விமான நிலையம் வரவேற்பு..!

இது MOM, சிங்கப்பூர் ஆயுதப்படைகள், சுகாதார அமைச்சகம், தகவல் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சகம் போன்ற இரண்டாம் நிலை அதிகாரிகளால் அமைக்கப்பட்டுள்ளது.

தங்கும் விடுதிகளில் கிருமித்தொற்று முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, இந்த புதிய ACE குழுமத்தின் கவனம், விடுதிகள் நெகிழ்ச்சியுடன் இருப்பதற்கும், வெளிநாட்டு ஊழியர்களின் புதிய பொது சுகாதார அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்கும் தேவையான முயற்சிகளைத் தொடரும் என்று MOM செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

வரும் அக்டோபர் 1 முதல், இந்த குழு முழுமையாக செயல்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது வெளிநாட்டு ஊழியர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் மற்றும் சுகாதார சேவைகளை மேலும் அணுகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட அந்த குழு, FAST என்ற குழுவை தொடர்ந்து பயன்படுத்தும். மேலும், குடும்பங்களுக்கு பணம் அனுப்புவது போன்ற தேவையான உதவிகளை வெளிநாட்டு ஊழியர்கள்களுக்கு அந்த குழுக்கள் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் தொடர்ந்து அதிகரித்து வரும் குணமடைந்தோர் எண்ணிக்கை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg