COVID-19: சிங்கப்பூரில் தொடர்ந்து அதிகரித்து வரும் குணமடைந்தோர் எண்ணிக்கை..!

532 more patients have been discharged from hospitals or community isolation facilities
(PHOTO: IStock)

சிங்கப்பூரில் நேற்றைய நிலவரப்படி, மேலும் 532 பேர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

அதனையும் சேர்ந்து இதுவரை மொத்தம் 53,651 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரிகளால் Taser மூலம் சுடப்பட்ட நபர் கைது..!

மருத்துவமனைகளில் இன்னும் 72 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் யாரும் சிகிச்சை பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், 2,466 பேர் சமூகத் தனிமை வசதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

லேசான நோய்த்தொற்று அறிகுறிகள் மட்டுமே அவர்களுக்கு காணப்படுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குறிப்பிட்ட இரு நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு வீட்டில் தங்கும் உத்தரவு கிடையாது..!

சிங்கப்பூரில் மொத்தம் 56,216 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை இந்த கிருமித்தொற்று காரணமாக 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து வரும் நாட்களில் தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணை.!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg