குறிப்பிட்ட இரு நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு வீட்டில் தங்கும் உத்தரவு கிடையாது..!

Singapore to waive stay-home notice for New Zealand and Brunei travellers
Singapore to waive stay-home notice for New Zealand and Brunei travellers

அடுத்த மாதம் செப்டம்பர் 1 முதல், புருணை மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள் வீட்டில் தங்கும் உத்தரவை நிறைவேற்ற தேவையில்லை என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதற்கு பதிலாக, அந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு COVID-19 பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து வரும் நாட்களில் தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணை.!

அதே நேரத்தில், மேற்கண்ட அந்த இரு நாடுகளுக்குச் செல்ல விரும்பும் மக்களுக்காக சிங்கப்பூர் தனது பயண ஆலோசனையை விரைவில் வெளியிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய ஆலோசனையின் கீழ், தடையற்ற இருவழிப் பயணப்பாதை ஏற்பாடு குறித்து இரு நாடுகளுடன் சிங்கப்பூர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், அனைத்து வெளிநாட்டு பயணங்களையும் தள்ளிவைக்க குடியிருப்பாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த இரு நாடுகளுடனான தடையற்ற இருவழிப் பயணப்பாதை ஏற்பாடுகள் தயாராகும் பட்சத்தில், ​​அது குறித்த விவரங்களை வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

COVID-19 தொற்று அபாயம் குறைவாக இருக்கும் பகுதிகளிலிருந்து வரும் பயணிகள் 14 நாள்கள் வீட்டில் தங்கும் உத்தரவை நிறைவேற்றத் தேவையில்லை, அவர்கள் 7 நாள்கள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றினால் போதுமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஆடவர் ஒருவரை காவல்துறை சுற்றிவளைத்து Taser மூலம் சுடும் காணொளி வைரல்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg