பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தும் சிங்கப்பூர் – SIA, சாங்கி விமான நிலையம் வரவேற்பு..!

SIA, Changi Airport welcome Government's decision to ease some COVID-19 travel restrictions
(PHOTO: Reuters)

புருனே மற்றும் நியூசிலாந்தில் இருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை எளிதாக்கும் அரசாங்கத்தின் முடிவை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) மற்றும் சாங்கி விமான நிலையக் குழு (CAG) வரவேற்றுள்ளன.

அடுத்த மாதம் செப்டம்பர் 1 முதல், அந்த இரு நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள் வீட்டில் தங்கும் உத்தரவை நிறைவேற்ற தேவையில்லை என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் தொடர்ந்து அதிகரித்து வரும் குணமடைந்தோர் எண்ணிக்கை..!

அதற்கு பதிலாக, அந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு COVID-19 பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

COVID-19 தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உலகளாவிய வர்த்தகம் மற்றும் பொருளாதாரங்களை மீட்பதற்கு விமானப் பயணம் மற்றும் விமானப் பயணத்தின் மீட்பு அவசியமான தூண்டுகோலாக உள்ளது என்று SIA குழுமம் தெரிவித்துள்ளது.

சர்வதேச விமானப் பயணங்களுக்கான தேவையைத் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூர் விமான மையத்தை படிப்படியாக புனரமைப்பதற்கான ஒரு முக்கியமான படி அது என்றும், இதை ஆதரிக்க SIA குழு தொடர்ந்து சிங்கப்பூர் அரசாங்கத்துடனும் அனைத்து பங்குதாரர்களுடனும் நெருக்கமாக பணியாற்றும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், கட்டுப்பாடுகளைப் படிப்படியாகத் தளர்த்துவது சரியான முடிவு என்று சர்வதேச ஆகாயப் போக்குவரத்துச் சங்கம் கூறியுள்ளது.

இதையும் படிங்க : குறிப்பிட்ட இரு நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு வீட்டில் தங்கும் உத்தரவு கிடையாது..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg