ஓயாமல் உழைக்கும் அம்மாவுக்கு உதவி செய்யும் மகன்.. “பள்ளி முடிந்ததும் கடைக்கு விரைவார்” – குவியும் வாழ்த்துக்கள்

singapore trending
Shin min daily news

கடையில் ஓயாமல் உழைக்கும் தன்னுடைய அம்மாவுக்கு ஓய்வு தேவை என்பதற்காக பள்ளியை முடித்துவிட்டு கடையை கவனித்துக்கொள்ளும் 14 வயது மகனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

அவரின் வயதிற்குட்பட்ட பெரும்பாலான பிள்ளைகள் பள்ளி முடிந்த பிறகு, வேறு இணை படிப்பை மேற்கொள்வார்கள் அல்லது நண்பர்களுடன் வெளியே சென்று விளையாடுவார்கள்.

லிட்டில் இந்தியாவில் பெண்ணை மானபங்கம் செய்த இளைஞர்.. மொத்தம் 11 ஆண்கள் மீது குற்றச்சாட்டு

ஆனால் ஃபாங் டெஃபு என்று குறிப்பிடப்படும் அந்த மாணவர், தோ பாயோவில் உள்ள அவரது அம்மாவின் பானங்கள் கடையை கவனித்துக் கொள்ள உதவி வருவதாக ஷின் மின் டெய்லி நியூஸ் நேற்று (ஜனவரி 24) தெரிவித்தது.

குவாங்யாங் மேல்நிலைப் பள்ளியின் படித்துவரும் மாணவரான ஃபாங், Primary 4 ஆம் வகுப்பு படிக்கும்போதே காபி மற்றும் தேநீர் தயாரிப்பது எப்படி என்று கற்றுக் கொள்ளத் தொடங்கினார்.

பள்ளி முடிந்ததும், நேராக பிஷானிலிருந்து தோ பாயோவுக்கு தனது சைக்கிளில் அவர் விரைந்து செல்வாராம்.

தனது அம்மாவுக்கு கடையில் உதவி செய்துவிட்டு, வழக்கமாக இரவு 8 மணிக்கு மட்டுமே அவர் வீடு திரும்புவார் என சொல்லப்பட்டுள்ளது.

மேலும் ஃபாங் தன்னுடைய பள்ளி வீட்டுப்பாடத்தை கடையின் முன் அமர்ந்து கொண்டு செய்வார் அல்லது வீடு திரும்பிய பிறகு செய்வார்.

கடினமான வேலைகளுக்கு பிறகு சோர்வாக இருந்தாலும் கூட, ஃபாங் வழக்கமாக தனது வீட்டுப்பாடத்தை முடித்து விடுவார் என்று ஷின் மின் தெரிவித்தது.

ஃபாங் தனது 41 வயதான அம்மாவின் சுமைகளை குறைக்க எப்போதும் முனைப்புடன் தயாராக இருப்பார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“அம்மாவுக்கு வயதாகிவிட்ட காரணத்தால், சில சமயங்களில் ஓய்வு தேவை” என்று அவர் ஷின் மின்னிடம் கூறினார்.

குடும்ப சூழ்நிலை அறிந்து பொறுப்புள்ள பிள்ளைகள் கிடைப்பது மிக பெரிய வரம் என பலர் கருத்து கூறி வருகின்றனர்.

பழுதடைந்த மின் சாதனங்கள், உடமைகளை இலவசமாக சரிசெய்து கொள்ளலாம் – செராங்கூன் உள்ளிட்ட 10 இடங்களில்..