பழுதடைந்த மின் சாதனங்கள், உடமைகளை இலவசமாக சரிசெய்து கொள்ளலாம் – செராங்கூன் உள்ளிட்ட 10 இடங்களில்..

repair-kopitiam-jan-28
Kow Zi Shan

பழுதடைந்த சொந்த உடைமைகளை சரிசெய்து அதன் ஆயுட்காலத்தை எப்படி நீட்டிக்க வேண்டும் என்பதை Repair Kopitiam கற்றுக்கொடுக்கிறது.

கடந்த முறை அது ஏற்பாடு செய்த மாதாந்திர நிகழ்வு Our Tampines Hub இல் 2023 டிசம்பர் 17 அன்று நடந்தது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பதிவு செய்திருந்தனர்.

லிட்டில் இந்தியாவில் பெண்ணை மானபங்கம் செய்த இளைஞர்.. மொத்தம் 11 ஆண்கள் மீது குற்றச்சாட்டு

Repair Kopitiam அமைப்பின் முக்கிய அம்சம், ஒரு பொருள் பழுதடைந்தால் அதை தூக்கி எறியும் கலாச்சாரத்தை மாற்ற விரும்புகிறது.

மேலும், சிங்கப்பூரில் பழுதுபார்க்கும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதையும் அது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த அமைப்பை Sustainable Living Lab கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.

வரும் ஜன. 28ஆம் தேதி நடைபெறவுள்ள அடுத்த Repair Kopitiam நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர், அதன் இணையதளத்தில் இரண்டு பொருட்கள் வரை பதிவு செய்து கொள்ளலாம்.

பங்கேற்கும் நபர்கள் மின்விசிறிகள், விசைப்பலகை, மடிக்கணினிகள், உடைகள், காலணிகள் மற்றும் மின் சாதனங்கள் ஆகியவற்றைக் கொண்டு வரலாம்.

அதனை பழுதுபார்ப்பதோடு மட்டுமல்லாமல், அங்குள்ள பயிற்றுவிப்பாளர்களிடம் இருந்தும் அதனை எவ்வாறு செய்யலாம் என்பதையும் கற்றுக்கொள்ளலாம்.

ஒன்பது இடங்களில் பதிவு செய்து கலந்துகொள்ளலாம்:

  • ஆங் மோ கியோ (Teck Ghee Vista RN)
  • புக்கிட் மேரா (சிட்டி ஸ்ப்ரௌட்ஸ், ஹென்டர்சன்)
  • தெம்பனீஸ் (Our Tampines Hub)
  • பாசிர் ரிஸ் (Coral Ris RN)
  • டோர்செட் (Pek Kio RC)
  • சோவா சூ காங் (CCKCC)
  • செராங்கூன் (லார் லீவ் லியான்)
  • ஜூரோங் (PAsion Wave @ Jurong Lake Gardens)
  • ஜூரோங் (YuHua CC)

ஆடவர் ஒருவருக்கு 21 ஆண்டுகள் சிறை, எட்டு பிரம்படிகள் விதித்து அதிரடி தீர்ப்பு