சிங்கப்பூரில் இருந்து இந்தியா திரும்ப இன்னும் 15,000 பேர் காத்திருப்பு..!

15,000 more waiting to return to India from Singapore
15,000 more waiting to return to India

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்று அச்சுறுத்தல் காரணமாக பலர் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பியுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் சிங்கப்பூரில் இருந்து சுமார் 17,000 இந்தியர்கள், 115 சிறப்பு மீட்பு விமானங்கள் மூலம் தாயகம் திரும்பியுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் விதிமுறைகளை மீறிய உணவகம் ஒன்றை மூடும்படி உத்தரவு..!

இன்னும் 15,000 பேர் இந்திய நாட்டிற்கு திரும்புவதற்காக காத்திருப்பதாக சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்தது என்று “தமிழ் முரசு” குறிப்பிட்டுள்ளது.

இந்தியா திரும்பியவர்களில் பெரும்பாலானவர்கள், தமிழ்நாட்டின் திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, சென்னை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஐந்து மாதங்களில் பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 2.5 மில்லியன் இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். குறிப்பாக சுமார் 300,000 பேர் தமிழகம் திரும்பியுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து கேரளாவைச் சேர்ந்த சுமார் 500,000 பேர் இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுவரை சுமார் 254,000 பேர் நாடு திரும்பியுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல, சிங்கப்பூரிலிருந்து பங்களாதேஷ் திரும்பிய ஊழியர்களும் வேலைவாய்ப்புகளின்றி தங்கள் சொந்த பகுதிகளில் சிரமப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கவனம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…