19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களைக் குவித்த சிங்கப்பூர் வீரர், வீராங்கனைகள்!

19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களைக் குவித்த சிங்கப்பூர் வீரர், வீராங்கனைகள்!
Photo: Team Singapore

 

சீனா நாட்டின் ஹாங்சோ என்ற நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, சீனா, ஜப்பான், தாய்லாந்து, தைவான், இந்தோனேசியா உள்ளிட்ட 40- க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,000- க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

சிங்கப்பூரில் பலத்த இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – அதே போல வெயிலும் பொளந்து கட்டும்

சிங்கப்பூர் சார்பில் ஏராளமான வீரர், வீராங்கனைகள் கலந்துக் கொண்டுள்ள நிலையில், பாய்மர படகுப்போட்டி, தடகளம், நீச்சல் உள்ளிட்ட போட்டிகளில் சிறப்பாக விளையாடிப் பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.

19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களைக் குவித்த சிங்கப்பூர் வீரர், வீராங்கனைகள்!
Photo: 19th Asian Games

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான பதக்கப் பட்டியலில் 276 பதக்கங்களுடன் சீனா முதலிடத்திலும், 125 பதக்கங்களுடன் ஜப்பான் இரண்டாவது இடத்திலும், 136 பதக்கங்களுடன் தென் கொரியா மூன்றாவது இடத்திலும், 62 பதக்கங்களுடன் இந்தியா நான்காவது இடத்திலும் உள்ளன.

டிப்பர் லாரி, சிற்றுந்து, கார் மோதி விபத்து: ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

குறிப்பாக, சிங்கப்பூர் 3 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 14வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் அக்டோபர் 8- ஆம் தேதி வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளதால், சிங்கப்பூர் வீரர், வீராங்கனைகள் மேலும் பதக்கங்களைக் குவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.