சிங்கப்பூரில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் சிக்கிய 2 வெளிநாட்டு இளைஞர்கள்

சிங்கப்பூரில் அதிகாரிகள் நடத்திய சோதனை நடவடிக்கையில் 5 இளையர்கள் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் சிக்கிய சந்தேக நபர்கள் 19 முதல் 23 வயதுக்கு உட்பட்ட நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண் என மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) கூறியுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரிகளுக்கு இவ்வளவு தான் வேகம்.. வந்தது புதிய கட்டுப்பாடு

கடந்த நவ.1 ஆம் தேதி நடந்த இந்த சோதனை நடவடிக்கையில் சுமார் ​​S$507,000 மதிப்புள்ள போதைப்பொருட்களையும் CNB கைப்பற்றியது.

Buangkok கிரசென்ட் அருகே உள்ள வீட்டில், போதைப்பொருள் குற்றங்களுக்காக 21 வயது சிங்கப்பூர் பெண்ணை CNB அதிகாரிகள் கைது செய்தனர்.

CNB

அதே போல, பெடிர் சாலை அருகில் உள்ள பகுதியில் இருந்து 23 வயதான சிங்கப்பூரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மேலும், Duchess அவென்யூவிற்கு அருகில் 20 மற்றும் 21 வயதுடைய இரண்டு வெளிநாட்டு ஆடவர்களையும் CNB அதிகாரிகள் கைது செய்தனர்.

விசாரணை தொடர்கிறது.

சிங்கப்பூரில் சம்பளத்தை உயர்த்த 72 சதவீத முதலாளிகள் திட்டம் – ஆய்வு