சிங்கப்பூரில் சம்பளத்தை உயர்த்த 72 சதவீத முதலாளிகள் திட்டம் – ஆய்வு

foreign worker jailed illegal money transfer
Photo: salary.sg Website

அடுத்த ஆண்டு முதல், மிகவும் போட்டித்தன்மையுள்ள வேலைகளின் சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டிருப்பதாக 72 சதவீத முதலாளிகள் ஆய்வில் கூறியுள்ளனர்.

சிங்கப்பூரில் இந்த ஆண்டின் நிலவரப்படி, பணியமர்த்துவது மிகவும் அல்லது ஓரளவு போட்டித்தன்மை மிக்கதாக இருந்ததாக 80 சதவீத நிறுவனங்கள் கண்டறிந்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

சிங்கப்பூரில் வேலைபார்க்கும் வெளிநாட்டினருக்கு மனிதவள அமைச்சகம் எச்சரிக்கை

சம்பளம் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளில் போட்டியிட முடியாததால் மட்டும் கடந்த ஆறு மாதங்களில் புதிய ஊழியர்களை பணியமர்த்துவதில் 10ல் நான்கு பேர் (39%) தவறியதாக சொல்லப்பட்டுள்ளது..

இருப்பினும், என்னதான் போட்டி இருந்தாலும் ஊழியர்கள் முக்கியம் என்ற அடிப்படையில், அடுத்த ஆறு மாதங்களில் ஊழியர்களை வேலைக்கு எடுக்க 43% சிங்கப்பூர் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

இந்த ஆய்வை திறன் சேவை நிறுவனமான மோர்கன் மெக்கின்லி நடத்தியது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் 650 நிறுவனங்கள் மற்றும் 3,400 வல்லுநர்களிடம் கருத்து கேட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

2024 ஆம் ஆண்டிற்கான நிறுவனங்களின் பணியமர்த்தல் நோக்கங்கள் என்ன, வேலையை மாற்றுவதற்கான முக்கிய உந்துதல்கள் என்ன, சம்பள எதிர்பார்ப்புகள் என்ன என்பதைக் கண்டறிய இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூர் வந்த 3 ஆடவர்கள்.. கோவில்களில் உண்டியல் திருட்டு – வீடியோ பார்த்து திருட வந்ததாக தகவல்