சிங்கப்பூரில் வேலைபார்க்கும் வெளிநாட்டினருக்கு மனிதவள அமைச்சகம் எச்சரிக்கை

singapore Foreigners mom salary
AFP

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் நீடிக்கும் இவ்வேளையில் வெளிநாட்டினர் சிங்கப்பூரை தங்கள் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

“தற்போது நடைபெற்று வரும் அந்த மோதலில் பல அப்பாவி மக்கள் இறந்துள்ளதாகவும், அது உலகளவில் உணர்ச்சிகளைத் தூண்டியுள்ளதாகவும் இன்று MOM பேஸ்புக் பதிவில் கூறியது.

வெறும் S$1 கொடுத்து S$56 லட்ச வெள்ளியை தட்டிச்சென்ற நபர் – முழுத்தொகையும் அவருக்கே

அதிக பதற்றமான சூழலை கருத்தில் கொண்டு, இது போன்ற வெளிநாட்டு நிகழ்வுகள் சிங்கப்பூரின் இன, சமய நல்லிணக்கம் மற்றும் அமைதியைப் பாதிக்க விடாமல் காப்பது முக்கியம் என அது குறிப்பிட்டது.

சிங்கப்பூரில் பணிபுரிபவர்கள் அல்லது வசிப்பவர்கள் வெளிநாட்டு அரசியலை இங்கு ஆதரிக்கவோ அல்லது கொண்டு வரவோ வேண்டாம் என உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவை எச்சரித்துள்ளன.

பதாகைகள் மற்றும் கொடிகள் ஏந்துவது, மேலும் சுவரொட்டிகள் ஒட்டுவது போன்றவற்றிற்கும் அனுமதி இல்லை என எச்சரித்துள்ளனர்.

தீவிரவாதம், வன்முறை அல்லது பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் சட்டம் இருப்பதையும் அது நினைவு கூர்ந்தது.

சிங்கப்பூரில் எகிறும் இந்திய பயணிகளின் வருகை – “சிங்கப்பூரை தாய்நாடு போல கருதும் இந்தியர்கள்”