சாங்கி விமான நிலையத்தில் பணத்துடன் பிடிபட்ட இரு வெளிநாட்டவர்கள்

Two men caught cash at Changi Airport
PHOTO: SINGAPORE POLICE FORCE, ICA, SINGAPORE CUSTOMS

பொய்யான தகவல் கொடுத்து குறிப்பிட்ட தொகைக்கு மேல் சிங்கப்பூர் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை சிங்கப்பூருக்குள் கொண்டு வந்த இரு வெளிநாட்டவர்கள் பிடிபட்டனர்.

பொய்யான தகவல் கொடுத்ததற்காகவும், குறிப்பிட்ட அளவுக்கு மேல் சிங்கப்பூருக்குள் பணம் கொண்டு வந்ததற்காகவும் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பிளம்பிங், எலெக்ட்ரிக்கல் உள்ளிட்ட வேலைகளில் உள்ள 133,000 வெளிநாட்டு ஊழியர்கள்… நடுத்தர சம்பளம் S$2,700.. சராசரி சம்பளம் S$3,100

39 மற்றும் 53 வயதுடைய அந்த ஊழியர்கள், S$120,000 தொகையை சிங்கப்பூருக்குள் கொண்டுவந்துள்ளனர்.

மற்றொரு சம்பவத்தில், 37 மற்றும் 48 வயதுடைய மற்றொரு இருவர், முன் அறிவிப்பு செய்யாமல் $20,000க்கு மேல் மதிப்புள்ள வெவ்வேறு நாட்டு பணத்தை சிங்கப்பூருக்குள் கொண்டு வந்து சிக்கினர்.

அவர்களிடமும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

நவம்பர் 16 அன்று, அந்த நான்கு பேரும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக நேற்று (நவ.24) காவல்துறையும் ICAவும் தெரிவித்தன.

சிங்கப்பூருக்குள் நுழையும்போதோ அல்லது வெளியேறும்போதோ இத செய்யாதீங்க – சிக்கிய வெளிநாட்டு ஊழியர்

லிட்டில் இந்தியாவில் அதிரடி சோதனை: சிக்கிய மதுபான கடைகளும், ஊழியர்களும்..