சிங்கப்பூருக்குள் நுழையும்போதோ அல்லது வெளியேறும்போதோ இத செய்யாதீங்க – சிக்கிய வெளிநாட்டு ஊழியர்

சாங்கி விமான நிலையத்தில் நடப்புக்கு வந்த புதிய சோதனை.. பிடிபட்ட பயணிகள் பலருக்கு அபராதம்

Singapore rules to know: சிங்கப்பூருக்குள் நுழையும்போதோ அல்லது நாட்டை விட்டு வெளியேறும்போதோ ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் கொண்டு சென்றால் அதிகாரிகளிடம் முறையாக தகவல் அளிக்க வேண்டும்.

அவ்வாறு செய்யத்தவறிய வெளிநாட்டு ஊழியர் ஒருவர், தனது வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் பணத்தை மாற்றுவதற்காக சிங்கப்பூருக்குள் கொண்டுவந்துள்ளார்.

சிங்கப்பூரில் கடும் விபத்து: லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம்

நாணய மாற்று கூரியராக பணிபுரிந்த அவர், இரண்டு தனித்தனி பயணங்களில் சுமார் S$3 மில்லியன் பணத்தை கொண்டு வந்தது குறித்து அதிகாரிகளுக்கு எந்த ஒரு தகவலும் கொடுக்கவில்லை.

இந்நிலையில், 26 வயதான Bryan Woo Kah Hou என்ற அவர், ஊழல், போதைப்பொருள் கடத்தல் போன்ற சட்டத்தின் கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

இதனால், அவருக்கு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 14) அன்று S$30,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோன்ற மற்றொரு குற்றச்சாட்டும் தண்டனையின் போது கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

மலேசியரான அவர் குற்றம் செய்த நேரத்தில், மலேசியாவின் சரவாக்கில் உள்ள நாணய மாற்று நிறுவனமான மில்லியன் செரினிட்டியில் பணக் கூரியராக பணிபுரிந்தார் என்று நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது.

சட்டத்தின்படி, சிங்கப்பூருக்குள் நுழையும்போதோ அல்லது நாட்டை விட்டு வெளியேறும்போதோ S$20,000க்கு மேல் பணத்தை கொண்டு செல்வோர் முறையாக தகவலை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

“சொந்த ஊரில் கடன் அதிகம் இருக்கு”.. முதலாளியின் S$88,600 பணத்தை அபேஸ் செய்த வெளிநாட்டவர்