சிங்கப்பூரில் கடும் விபத்து: லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம்

lorry-driver-passed-away-jurong
@sgroads/Telegram and Lianhe Zaobao

பெனாய் சாலை மற்றும் ஜாலான் அஹ்மத் இப்ராஹிம் சந்திப்பில் ஏற்பட்ட விபத்தில் லாரியின் அடியில் சிக்கி 43 வயதான ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.

இன்று (நவம்பர் 14) காலை கார் மற்றும் லாரி மோதி விபத்து ஏற்பட்டதாகவும், லாரி ஓட்டுநர் உயிரிழந்தார் என்றும் கூறப்படுகிறது.

“சொந்த ஊரில் கடன் அதிகம் இருக்கு”.. முதலாளியின் S$88,600 பணத்தை அபேஸ் செய்த வெளிநாட்டவர்

SgRoad என்னும் டெலிகிராம் குழுவில் இந்த சம்பவத்தின் வீடியோ பகிரப்பட்டுள்ளது, அதில் இருவழிச் சாலையின் குறுக்கே ஒரு லாரி கிடப்பதைக் காணலாம்.

பெனாய் சாலை மற்றும் ஜாலான் அஹ்மத் இப்ராஹிம் சந்திப்பில் காலை 8:25 மணியளவில் நடந்த இந்த சம்பவம் குறித்து தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக SCDF கூறியது.

லாரிக்கு அடியில் சிக்கி இருந்த ஓட்டுநரை மீட்க மீட்பு உபகரணங்களை SCDF பயன்படுத்தியது.

பின்னர் லாரி ஓட்டுநர் உயிரிழந்ததாக SCDF துணை மருத்துவர் சம்பவ இடத்திலேயே உறுதி செய்தார்.

மற்றொரு ஆடவர், 52 வயதான கார் ஓட்டுனர், இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு மறக்க முடியாத நாளாக மாறிய தீபாவளி