“சொந்த ஊரில் கடன் அதிகம் இருக்கு”.. முதலாளியின் S$88,600 பணத்தை அபேஸ் செய்த வெளிநாட்டவர்

banks Police freez scammers accounts
(Photo: Mothership)

தன் முதலாளியின் 95 வயது தந்தையின் வங்கிக் கணக்கிலிருந்து மொத்தம் S$88,600 பணத்தை எடுத்த பணிப்பெண்ணுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சக்கர நாற்காலியில் இருந்த தன் தந்தை இறந்த பின்னர், வங்கி விவரங்களை பெற்ற பிறகுதான் அவரது மகனுக்கு இந்த உண்மை தெரியவந்தது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு மறக்க முடியாத நாளாக மாறிய தீபாவளி

இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த 32 வயதான ஏகா யுனியார்சிஹ் என்ற அந்த பணிப்பெண்ணுக்கு நம்பிக்கையை மீறிய குற்றத்திற்காக 15 மாத சிறைத்தண்டனை இன்று (நவம்பர் 14) விதிக்கப்பட்டது.

மேலும் பணிப்பெண் கைது செய்யப்பட்ட பின்னர் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட S$5,442 தொகையை இழப்பீடாக வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

ஏகா தனது முதலாளியின் தந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டி பணியமர்த்தப்பட்டதாக நீதிமன்றம் சொன்னது.

கடந்த ஜூலை மாதம் முதியவர் இறக்கும் வரை, அதாவது இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஏகா அந்த குடும்பத்தில் வேலை செய்தார்.

முதியவர் தமக்கு பணம் எடுத்துக்கொடுக்க வேண்டி ஏகாவிடம் வங்கி அட்டை விவரங்களை கூறியதாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ஏகா, சொந்த ஊரில் தமக்கு இருந்த கடனை அடைக்க வங்கி கணக்கை பயன்படுத்திக்கொண்டார்.

ஜனவரி 30 முதல் ஜூலை 7 வரை, அவர் வங்கிக் கணக்கில் இருந்து 89 முறை ஏகா பணம் எடுத்துள்ளார்.

இறுதியாக இதை அறிந்த முதலாளி போலீசில் புகார் செய்தார்.

வெளிநாட்டு ஊழியருக்கு சட்டவிரோத முறையில் உதவி செய்த ஆடவருக்கு S$5,000 அபாரதம்