வெளிநாட்டு ஊழியருக்கு சட்டவிரோத முறையில் உதவி செய்த ஆடவருக்கு S$5,000 அபாரதம்

சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிட்
MOM

வெளிநாட்டு ஊழியருக்கு சட்டவிரோத முறையில் உதவி செய்த ஆடவருக்கு S$5,000 அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.

தன் சொந்த Deliveroo கணக்கை ஊழியருக்கு கொடுத்து, உணவு விநியோக ஓட்டுநராக பணிபுரிய ஆடவர் அனுமதித்ததாக சொல்லப்பட்டுள்ளது.

கால்கள் நொண்டியவாறும், கைத்தடிகள் உதவியுடனும் தீபாவளியை கொண்டாடிய வெளிநாட்டு ஊழியர்கள்

அந்த வெளிநாட்டவரிடம் முறையான வேலை அனுமதியும் இல்லை என்பது கூடுதல் தகவல்.

36 வயதுமிக்க லோ கிம் சூன் என்ற அந்த ஆடவர், கடந்த வியாழன் அன்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ் ஒரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

27 வயதுமிக்க முஹம்மது சியாசுவான் ஷரில் என்ற அந்த ஊழியர், லோவின் கணக்கைப் பயன்படுத்தி உணவு விநியோக ஓட்டுநராக கூடுதல் வேலைகளைச் செய்ய முடியுமா என்று லோவிடம் கேட்டதாக நீதிமன்றம் கூறியது.

இருவரும் முன்னர் ஒன்றாக வேலைபார்த்த ஊழியர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

Deliveroo, சிங்கப்பூரர்கள் மற்றும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் மட்டுமே வேலை பதிவு செய்ய அனுமதிக்கிறது.

கடந்த செப்டம்பரில், முறையான வேலை அனுமதிகள் இல்லாமல் வேலைபார்த்த உணவு விநியோக ஓட்டுநர்கள் 4 பேர் பிடிபட்டனர்.

அந்த 4 வெளிநாட்டு ஊழியர்களில் இவரும் ஒருவர். அதில் ஒரு இந்தியரும் அடங்குவார்.

சிங்கப்பூரில் சிக்கிய இந்திய ஊழியர் உட்பட 4 வெளிநாட்டு ஊழியர்கள்.. சட்டவிரோத வேலை – நிரந்தர தடை விதிக்கப்படலாம்

“என் தமிழ் மொழி திறன் அவர்களுக்கு உதவும்” – தீபாவளியை கொண்டாடாமல் லிட்டில் இந்தியாவில் ரோந்து பணியாற்றிய சிங்கப்பூர் காவல்துறை அதிகாரி