“என் தமிழ் மொழி திறன் அவர்களுக்கு உதவும்” – தீபாவளியை கொண்டாடாமல் லிட்டில் இந்தியாவில் ரோந்து பணியாற்றிய சிங்கப்பூர் காவல்துறை அதிகாரி

deepavali-police-officer
Photo: SPF

தீபாவளியை குடும்பத்தினருடனும் தன் நண்பர்களுடனும் கொண்டாட விடுமுறை எடுக்க வாய்ப்பு இருந்தும், அதற்குப் பதிலாக லிட்டில் இந்தியாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சிங்கப்பூர் காவல்துறை அதிகாரி ஒருவரை பற்றி தான் இந்த பதிவு.

ரோச்சர் அக்கம்பக்கம் காவல் நிலைய அதிகாரியான நிவேதா விஜயகுமார், இந்த தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடாமல் லிட்டில் இந்தியாவில் பணிபுரிய முன்வந்தது ஏன் என்பதை SPF வெளியிட்ட நேர்காணலில் விளக்கினார்.

வெளிநாட்டவரால் லாரி விபத்தில் சிக்கிய ஊழியர் மரணம்.. சமீபத்தில் திருமணமான அவருக்கு 2 மாதத்தில் குழந்தை பிறக்க இருந்தது

விடுப்பு எடுத்துக்கொள்ளுங்கள் என்று என் குழு என்னிடம் கேட்டுக் கொண்டது, ஆனால் இந்த பண்டிகை காலத்தில் எனது தமிழ் மொழி திறன் மக்களுக்கு உதவியாக இருக்கும் என்பதை உணர்ந்து லிட்டில் இந்தியாவில் பணிக்கு சென்றதாக அவர் விளக்கினார்.

“தான் அதிகாரியாக பொறுப்பேற்ற முதல் ஆண்டு இது என்பதால், இந்த தீபாவளி எனக்கு தனித்துவமானது” என்றும் அவர் கூறினார்.

மேலும் தனது குடும்பத்தினரின் ஆசிர்வாதம் அவருக்கு இருப்பதாகவும் நிவேதா சொன்னார்.

தனது குடும்பம் என் பொறுப்புகளைப் புரிந்துகொள்கிறது, மேலும் கடமை செய்யும் அதிகாரிகளுக்கு ஒருபோதும் ஓய்வு கிடையாது என்பதை ஏற்றுக்கொள்வதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த பண்டிகையில் என் உறவினர்களுடன் இல்லாமல் போனாலும், நான் எனது குழுவோடும், தீபாவளியை கொண்டாட லிட்டில் இந்தியா வரும் உறவுகளை கவனிப்பதை மகிழ்வாக பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் நாள் முடிவில், என் கடமையை செய்த மன நிறைவோடு என் குடும்பத்திற்குத் திரும்பிச் செல்வேன் என மகிழ்வுடன் குறிப்பிட்டார்.

தீபாவளியை கொண்டாடும் தமிழ் உறவுகளின் பாதுகாப்புக்காக தன் ஓய்வு நாளிலும் கடமையை செய்த அதிகாரி நிவேதாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

வெளிநாட்டு ஊழியர்களே… மூட்டைப்பூச்சி தாக்குதல் வழக்கத்தைவிட 30% அதிகரிக்குமாம்