வெளிநாட்டவரால் லாரி விபத்தில் சிக்கிய ஊழியர் மரணம்.. சமீபத்தில் திருமணமான அவருக்கு 2 மாதத்தில் குழந்தை பிறக்க இருந்தது

accident worker death foreigner arrest
Shin Min Daily News

ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேயில் சிற்றுந்து, லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை சம்பந்தப்பட்ட விபத்தில் சிக்கி 27 வயதுமிக்க ஆடவர் கடந்த புதன்கிழமை உயிரிழந்தார்.

விபத்தில் மரணித்த முஹம்மது நூர்ஹில்மி அதான் என்ற அந்த ஆடவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது என்றும், 22 வயதுமிக்க அவரின் மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களே… மூட்டைப்பூச்சி தாக்குதல் வழக்கத்தைவிட 30% அதிகரிக்குமாம்

சோகமான செய்தி என்னவென்றால் இன்னும் இரண்டு மாதங்களில் குழந்தை பிறக்க இருந்ததாகவும் ஷின் மின் டெய்லி நியூஸ் மற்றும் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளன.

நூர்ஹில்மி ஃப்ரீலான்ஸ் டெலிவரி ஓட்டுநராக வேலைபார்த்து வந்தவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கி கடும் காயம் அடைந்த அவர், டான் டோக் செங் மருத்துவமனைக்கு சுயநினைவின்றி கொண்டு செல்லப்பட்டடார்.

ஆனால், அன்றைய தினமே அவர் உயிரிழந்தார் என போலீசார் தெரிவித்தனர்.

வெளிநாட்டவர் கைது

38 வயதுமிக்க எல்டானிஸ் இபிஷோவ் என்ற ரஷ்ய நாட்டவர் நேற்று முன்தினம் நவம்பர் 10 அன்று கடுமையான காயத்தை ஏற்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டார்.

ஓடும் சிற்றுந்தில் இருந்து அந்த ரஷ்ய பயணி சாலையில் குதித்ததாகவும், இதனால் சாலையில் சென்ற லாரி பிரேக் அடித்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இதனால் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நூர்ஹில்மி லாரியின் பின்புறம் மோதியதாக கூறப்பட்டுள்ளது.

லாரி, சிற்றுந்து மற்றும் பைக் விபத்து: 27 வயதுமிக்க ஆடவர் மரணம் – பயணி ஒருவர் கைது

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டியை தாக்கிய வெளிநாட்டு ஊழியர்… ஆணா இல்லை பெண்ணா? முதலாளிக்கே குழப்பம்