பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டியை தாக்கிய வெளிநாட்டு பணிப்பெண்… ஆணா இல்லை பெண்ணா? முதலாளிக்கே குழப்பம்

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டியை தாக்கிய வெளிநாட்டு ஊழியர்
Shin Min Daily News

Foreign workers Singapore latest news: அறிவாற்றல் இழப்பு மற்றும் பக்கவாதத்தால் படுத்த படுக்கையாக இருக்கும் 86 வயதான மூதாட்டியை தாக்கிய வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்ணுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மியான்மர் நாட்டை சேர்ந்த 32 வயதுமிக்க அந்த பணிப்பெண் ஆண்களை போல இருக்கும் “டாம்-பாய்ஸ்” என்று முதலாளிக்கு முன்பே சொல்லப்பட்டு தான் வேலைக்கும் எடுக்கப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர்களே… மூட்டைப்பூச்சி தாக்குதல் வழக்கத்தைவிட 30% அதிகரிக்குமாம்

ஆனால், பணிப்பெண் உண்மையாகவே ஆணாக மாற வேண்டி ஹார்மோன் சிகிச்சை செய்துகொண்டதாகவும் முதலாளி பின்னர் கண்டுபிடித்தார்.

இருப்பினும், பணிப்பெண் தன் வேலையை சிறப்பாகச் செய்து வந்ததாகவும் அவர் கூறினார்.

அவ்வாறு போய்க்கொண்டு இருக்கையில், ஒரு நாள் முதலாளி தனது தாயின் கால் வீங்கியிருப்பதைக் கண்டறிந்தார், பின்னர் சிகிச்சை பெற்று எக்ஸ்ரே எடுத்த பின்னர் அது எலும்பு முறிவு என்று தெரியவந்தது.

CCTV காட்சிகளை சரிபார்த்த முதலாளிக்கு அதிர்ச்சி காத்திருந்தது, பணிப்பெண் தனது தாயின் முகத்தில் தொடர்ந்து நான்கு முறை குத்துவதைக் கண்ட மகன் கோபமடைந்தார்.

கடந்த அக்டோபர் மாதம் நடந்த இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்ந்த ஓ வின் கி என்ற அவர், உடற்குறையுற்ற நபரைத் தாக்கிய குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நவம்பர் 10 அந்த வெளிநாட்டவருக்கு 13 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த மூதாட்டியை கவனித்துக் கொள்ள ஓ பணியமர்த்தபட்டார்.

வேலை இல்லாமல் பலர் சிரமப்பட்டு வரும் இந்த கால கட்டத்தில், கிடைத்த வேலையை இவ்வாறு வீணடிக்கும் சில ஊழியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

“வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகப்படுத்த முடியாது” – நிறுவனங்களுக்கு அறிவுரை